பி.எம்.இந்தியா
குற்றவியல் விவகாரங்களுக்கான சட்டப்பூர்வ உதவி குறித்து இருதரப்பு ஒப்பந்தம் இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு இடையே கையெழுத்தாவதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி குற்றவியல் நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்யவும் பரஸ்பர சட்டப்பூர்வ உதவிகளை அளிப்பது குறித்தும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. நாடுகளுக்கு இடையே குற்றங்கள் நடக்கும் பட்சத்தில் அக்குற்றங்களில் தீவிரவாதத்துடன் தொடர்பு உள்ளதா என்பது பற்றி ஆராயப்படும். குற்றங்கள் குறித்து ஆராயவும் அவற்றை கண்டுபிடிக்கவும் பொருள்கள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றவும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி வருவது குறித்து ஆராயவும் மாலத்தீவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.