Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கேரளம் உருவான தினத்தை முன்னிட்டு கேரள மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று கேரளப்பிறவி எனப்படும் கேரள மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு கேரள மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தச் சிறப்பு நாள், கேரளாவின் துடிப்பான பாரம்பரியங்களையும், சிறப்பான உணர்வையும் கொண்டாடுகிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளர். அபரிமிதமான இயற்கை அழகு, வளமான கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட்ட இந்த மாநிலம், தேசத்தின் வரலாற்றில் எப்போதுமே ஒரு போற்றத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது என்று அவர் தெரவித்துள்ளார்.

கேரளாவின் மிகப்பெரிய பலம் அதன் மக்களிடமே உள்ளது எனவும் சிறந்து விளங்குவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பும் ஈடுபாடும் இந்தியாவின் எல்லைகளைத் தாண்டியும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். சுகாதாரம், கல்வி, தொழில்முனைவு, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர்களின் சாதனைகள் தேசத்தைப் பெருமைப்படுத்தியுள்ளன என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“கேரள மாநிலத்தில் உள்ள என் சகோதர சகோதரிகளுக்கு கேரளப்பிறவி வாழ்த்துகள்! இந்தச் சிறப்பு நாள் கேரளத்தின் உயிரோட்டமான பாரம்பரியங்களையும், சிறப்பான உணர்வையும் கொண்டாடுகிறது. அபரிமிதமான இயற்கை அழகும், வளமான கலாச்சாரப் பாரம்பரியமும் கொண்ட இந்த மாநிலம், நமது தேசத்தின் வரலாற்றில் எப்போதுமே ஒரு போற்றத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது.

கேரளத்தின் மிகப்பெரிய பலம் அதன் மக்களிடமே உள்ளது. அவர்களின் அர்ப்பணிப்பும், சிறந்து விளங்குவதற்கான ஈடுபாடும் இந்தியாவின் எல்லைகளைத் தாண்டியும் பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது. சுகாதாரம், கல்வி, தொழில்முனைவு, அறிவியல் உள்ளிட்ட பல துறைகளில் கேரள மக்கள் ஆற்றிய சாதனைகள் தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளன. வரும் ஆண்டுகளில் கேரளத்தின் ஒவ்வொருவருக்கும் புதிய வாய்ப்புகளும், பெரும் செழிப்பும், தொடர்ச்சியான முன்னேற்றமும் கிடைக்கட்டும்.”

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331097&reg=3&lang=1

***

SK/PLM/PD