பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கேரளாவின் திருச்சூரில் அஞ்சல் துறைக்கு சொந்தமான 16.5 சென்ட் நிலம் மற்றும் கட்டிடத்தை பத்தளம் சாலை விரிவாக்கத்துக்காக திருச்சூர் மாநகராட்சிக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. பொதுநலன் கருதி, நிலத்துக்கு நிலம் பரிமாற்றம் என்ற கொள்கையின் அடிப்படையில், நிலம் ஒப்படைக்கப்படுகிறது.
மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்படும் 16.5 சென்ட் நிலத்துக்கு இணையான நிலம், அஞ்சல் துறைக்கு தற்போது உள்ள திருச்சூர் மத்திய அஞ்சல் அலுவலகத்துக்கு 200 மீட்டர் தொலைவில் வழங்கப்படும். மேலும், அஞ்சல் துறை குறிப்பிட்டுள்ளபடி, 3,500 சதுர அடியில் அஞ்சல் அலுவலகத்தை தனது சொந்த செலவில் திருச்சூர் மாநகராட்சி கட்டிக் கொடுக்கும். இதில், அஞ்சல் அலுவலகத்துக்கு இரண்டு நுழைவு வாயில்களுடன் சுற்றுச்சுவரும் கட்டிக் கொடுக்கப்படும். ஏற்கனவே உள்ள பத்தளம் சாலையை விரிவாக்கம் செய்யும் திருச்சூர் மாநகராட்சியின் திட்டத்தால், விபத்து இல்லாத போக்குவரத்துக்கு வழிவகுக்கும். இதனால், அந்தப் பகுதியில் உள்ள மக்கள் பயனடைவார்கள்.
பரிசீலனையில் உள்ள இந்தத் திட்டத்தின் கீழ், உள்ளூர் பகுதி மக்களால், ஏற்கனவே உள்ள திருச்சூர் மத்திய அஞ்சல் அலுவலகத்துக்கு முன்பாக உள்ள பத்தளம் சாலை வழியாக, எந்தவொரு போக்குவரத்து நெரிசலுமின்றியும், குறுகிய நேரத்திலும் எளிதில் பயணம் மேற்கொள்ள முடியும்.
****