Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கேரள முன்னாள் முதலமைச்சர் திரு வி எஸ் அச்சுதானந்தன் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


கேரள முன்னாள் முதலமைச்சர் திரு வி எஸ் அச்சுதானந்தன் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

“கேரள முன்னாள் முதலமைச்சர் திரு வி எஸ் அச்சுதானந்தன் அவரகளின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவர் பொதுமக்கள் சேவைக்காகவும், கேரளாவின் முன்னேற்றத்திற்காகவும் தமது வாழ்க்கையின் பல ஆண்டுகளை அர்ப்பணித்தவர்.  நாங்கள் இருவரும் முதலமைச்சர்களாக பணியாற்றிய போது, நிகழ்ந்த எங்களின் கலந்துரையாடல்களை நான் நினைத்துப் பார்க்கிறேன்.  இந்த சோகமான தருணத்தில் எனது நினைவுகள் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் உள்ளன.”

—-

(Release Id 2146497)

AD/TS/SMB/KPG/DL