Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கொல்கத்தாவில் கட்டப்பட்டுவந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் குறித்து பிரதமர் விசாரித்தார்


கொல்கத்தாவில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் விசாரித்து அறிந்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பிரதமர் தனது அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

“கொல்கத்தாவில் கட்டப்பட்டு வந்த ஒரு மேம்பாலம் இடிந்து விழுந்த செய்தி அறிந்து நான் மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். இது பற்றிய நிலைமையை அறிந்து கொண்டதோடு, மீட்புப் பணிகள் குறித்தும் தகவல் தெரிந்து கொண்டேன்.

கொல்கத்தாவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் காயமுற்றவர்கள் விரைவில் நலம்பெறவும் வேண்டுகிறேன்” என்று பிரதமர் தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

*****