Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கோடைக்கால இளைஞர்கள் ஒலிம்பிக் 2018-ல் வெற்றிபெற்றவர்களுக்கு பிரதமர் பாராட்டு

கோடைக்கால இளைஞர்கள் ஒலிம்பிக் 2018-ல்  வெற்றிபெற்றவர்களுக்கு பிரதமர் பாராட்டு

கோடைக்கால இளைஞர்கள் ஒலிம்பிக் 2018-ல்  வெற்றிபெற்றவர்களுக்கு பிரதமர் பாராட்டு

அர்ஜென்டினாவில் நடைபெற்ற கோடைக்கால இளைஞர்கள் ஒலிம்பிக் 2018-ல் வெற்றிபெற்ற வீரர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

வரும் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்று மேடை ஏறும் தங்கள் கனவுகளை நோக்கி கடுமையாக உழைக்குமாறு அந்த வீரர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.
அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகள் மற்றும் வசதிகளை அரசு அளிக்கும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.

இந்த இளம் விளையாட்டு வீரர்கள் தங்களின் பள்ளிகள் மற்றும் கிராமத்தில் உள்ள மற்ற இளைஞர்கள் விளையாட்டை தேர்ந்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார்.

உலக அரங்கில் இந்தியாவின் பெயரை உயர்த்த பங்காற்றிய இந்த வீரர்களின் பயிற்சியாளர்களை பிரதமர் பாராட்டினார்.