பி.எம்.இந்தியா
சமீபத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட “சத்யபாமாசாட்” செயற்கைக்கோளை உருவாக்கிய மாணவர்கள் குழுவினர் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று புது தில்லியில் சந்தித்தனர். சத்யபாமா துணை வேந்தர் டாக்டர் பி. ஷீலா ராணியும் உடன் இருந்தார்.
பசுமைக்குடில் வாயுக்கள் குறித்த தரவுகளை சேகரிக்கும் இந்த செயற்கைக்கோளை உருவாக்கிய குழுவின் முயற்சியை பிரதமர் பாராட்டினார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் ஜூன் 22, 2016 அன்று பி.எஸ்.எல்.வி -சி34 செலுத்தும் வாகனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய 20 செயற்கைக்கோள்களில் “சத்யபாமாசாட்” செயற்கைக்கோளும் ஒன்று.
A riveting interaction to remember…with students involved in building satellite Sathyabamasat. pic.twitter.com/vHeQsgZtO0
— Narendra Modi (@narendramodi) July 19, 2016
You will recall that Sathyabamasat was one of the twenty satellites launched by @isro using launch vehicle PSLV-C34 on 22nd June, 2016.
— Narendra Modi (@narendramodi) July 19, 2016