Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்வதேச பண நிதியம் நிர்வாக இயக்குனர் பிரதமருடன் சந்திப்பு


s2015031663220 [ PM India 257KB ]

s2015031663222 [ PM India 170KB ]

சர்வதேச செலாவனி நிதியத்தின் மேலாண்மை இயக்குனர் செல்வி கிறிஸ்டின் லகார்டே பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

பொருளாதாரத்திற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் அரசு கவனமாக செயல்பட்டு வருகிறது. இதன் பலன் தெளிவாக தெரிகிறது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.5% தாண்டியுள்ளது. இது உலக பொருளாதாரத்தில் இந்தியா பிரகாசமான இடத்தில் உள்ளது என்பதை தெளிவுப்படுத்துகிறது. இந்தியா தொடர்ந்து வளர்ச்சி பாதையில் செல்லும் என நான் நம்புகிறேன் என்று செல்வி லகார்டே தெரிவித்தார்.

செல்வி லகார்டேவுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், தெளிவான திசை மற்றும் கவனத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். சீர்திருத்தங்கள் சட்டத்திற்கு மட்டுமின்றி, அமலாக்கத்திற்கும் அதன் திசைக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். வளர்ச்சியை ஊக்குவிக்கும் போது, வேலைவாய்ப்பை உருவாக்குவது, ஒட்டுமொத்த (inclusive) வளர்ச்சியை ஏற்படுத்துவது, கிழக்கு, வட-கிழக்கு இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட மண்டலங்களின் வளர்ச்சி ஆகியவற்றில் எனது கவனம் இருக்கும். இந்த மண்டலங்களில் இயற்கை, மனித வளம் செழிப்பாக உள்ளது. இதற்கு நாம் முதலீடு செய்ய வேண்டும். மேலாண்மை, உற்பத்தி, சேவை என அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

சர்வதேச பண நிதியத்தின் உயர் நிலையில், குறிப்பாக துணை மேலாண்மை இயக்குனர் நிலையில் இந்திய பிரதிநிதிகளின் தேவை குறித்து பிரதமர் எடுத்துரைத்தார்.