Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்வதேச பயங்கரவாதம், நாடுகடந்த திட்டமிட்ட குற்றங்களைத் தடுப்பதில் இந்திய – ஆஸ்திரேலியா நாடுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது


சர்வதேச பயங்கரவாதம், நாடுகடந்த குற்றச் செயல்கள் ஆகியவற்றைத் தடுப்பதற்காக இந்திய – ஆஸ்திரேலிய நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் உடனடி ஒப்புதல் அளித்தது.

இந்த உத்தேச ஒப்பந்தம் இந்திய, ஆஸ்திரேலிய நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை வலுப்படுத்தும். தகவல் பரிமாற்றம், நிபுணத்துவம், அனுபவப் பகிர்வு, திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் இந்த மண்டலத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் துணைபுரியும்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கண்ட எல்லாப் பிரச்சினைகளையும் கையாள்வதற்கு உறுதியான கட்டமைப்பாக விளங்கும்.

இரு நாடுகளுக்கும் இடை.யில் பரஸ்பர ஒத்துழைப்புக்கும், பல்வேறு துறைகள், நிறுவனங்கள் நிலையிலான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும் வசதி செய்யும். இந்தப் புரிந்துணர்வு உடன்பாடு நடைமுறைக்கு வரும்போது சர்வதேச பயங்கரவாதத்தையும் நாடு கடந்த திட்டமிட்ட குற்றங்களையும் நசுக்க பெரிய அளவில் துணை புரியும்.

***