Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்வதேச பெண்குழந்தைகள் தினத்தையொட்டி பிரதமரின் வாழ்த்துச் செய்தி


ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 11 அன்று கடைப்பிடிக்கப்படும் சர்வதேச பெண்குழந்தைகள் தினத்தையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி அளித்த வாழ்த்துச் செய்தியில் கீழ்கண்டவாறு தெரிவித்திருந்தார்:

“படிப்பிலிருந்து விளையாட்டு வரை பெண்குழந்தைகள் ஒவ்வொரு துறையிலும் தங்கள் முத்திரையை பதித்து வருகின்றனர். சர்வதேச பெண்குழந்தைகள் தினத்தில் அவர்களது சாதனைகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாலின அடிப்படையில் எவ்வித வேறுபாடும் காட்டாத, தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பெண்கள் பெறுகின்ற இந்தியாவை உருவாக்குவதை நோக்கி நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.”