Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சவுதி தொழிலதிபர்களுடன் பிரதமர் சந்திப்பு

சவுதி தொழிலதிபர்களுடன் பிரதமர் சந்திப்பு


சவுதி அரேபியாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி 30 தனியார் நிறுவனங்களின் சவுதி தலைமை செயல் அலுவலர்கள் மற்றும் இந்திய தொழிலதிபர்களை சந்தித்தார். இந்தியாவும் சவுதியும் நீண்டகால நண்பர்கள் என்பதை வலியுறுத்திய பிரதமர், பிரகாசமான எதிர்காலத்துக்காக அடுத்த அடியை எடுத்து வைக்க இந்தியாவும் சவுதியும் தயாராக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியா மற்றும் சவுதிக்கு இடையே இருக்கும் நெருக்கமான தொடர்புகளை குறிப்பிட்ட பிரதமர், அரசர் சல்மான் அவருக்கு ஒரு இந்திய ஆசிரியர் கல்வி கற்பித்தது குறித்து பேசியதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.

ஜனநாயகம், மக்கள் தொகை மற்றும் தேவை ஆகியவை நிறைந்த ஒரு பிரத்யேகமாக கலவையாக இந்தியா இருப்பதை குறிப்பிட்ட பிரதமர், கடந்த இரண்டு ஆண்டுகளில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை பிரதமர் குறிப்பிட்டார்.

மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியில் முதலீடுகள் செய்ய நல்ல வாய்ப்பு இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். உலகத்தோடு போட்டி போடக் கூடிய அளவுக்கு வளர்ந்துள்ள இந்திய சுகாதாரத் துறை, சுகாதார சுற்றுலா வளர்வதற்கு பல்வேறு வாய்ப்புகளை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். பெரிய எண்ணிக்கையில் அரபு நாடுகளில் இருக்கும் இந்திய செவிலியர்கள் இதற்கு சான்று என்றார் பிரதமர்.

இறக்குமதி ஏற்றுமதி அல்லாமல் இரு நாடுகளுக்கிடையே உறவு வளர வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் கூட்டு முதலீடுகள் வளர வேண்டும் என்றார்.

பின் தேதியிட்ட வரி விதிப்பு இனி நிகழாது என்ற பிரதமர், நீண்ட காலத்துக்கான உறுதியான வரி விதிப்பு முறைகள் கையாளப்படும் என்றார். பெட்ரோலியம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பாதுகாப்புத் துறை உற்பத்தி போன்ற துறைகளில் சவுதி முதலீடு செய்ய முடியும் என்றார். உரத்துறை, கிடங்குத் துறை, குளிர்பதனத் துறை, விவசாயம் போன்ற துறைகளில் சவுதி முதலீடு செய்வதால், நல்ல தரமான உணவுப் பொருட்கள் சவுதிக்கு கிடைக்கும். இதனால் இரு தரப்புக்கும் நல்ல பலன் கிடைக்கும் என்றார் பிரதமர்.

இந்தியா மற்றும் சவுதி, இணைய பாதுகாப்புத் துறையில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார் பிரதமர்.