Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்காக இந்தியாவிற்கும் ஐக்கிய அரபுக் குடியரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்காக இந்தியாவிற்கும் ஐக்கிய அரபுக் குடியரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு தனது ஒப்புதலை வழங்கியது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மற்றும் ஐக்கிய அரபுக் குடியரசுகளின் நிலம் மற்றும் கடல் போக்குவரத்துக்கான மத்திய போக்குவரத்து ஆணையம் ஆகியவற்றால் கையெழுத்து இடப்படும்.

திட்டமிடப்பட்டுள்ள இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவிற்கும் ஐக்கிய அரபுக் குடியரசுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு, பரிமாற்றம், கூட்டுச் செயல்பாடு ஆகியவற்றை அதிகரிக்க உதவும் என்பதோடு, கட்டமைப்பு வளர்ச்சியில் முதலீடு அதிகரிக்கவும், வசதிகளின் செயல்திறமையை மேம்படுத்தவும் பங்களிப்பு செய்யும். மேலும் பாதுகாப்பான, சிக்கனமான, திறமையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான சாலைப் போக்குவரத்தை நாட்டில் வளர்த்தெடுக்க இது உதவும் என்பதோடு, இத்துறையில் ஒத்துழைப்பிற்கான நிறுவன ரீதியான ஏற்பாட்டை உருவாக்கவும் இரு நாடுகளுக்கும் உதவும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சிறப்பு அம்சங்களாவன:

அ. சாலைகளின் மூலமான பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கான போக்குவரத்து தொழில்நுட்பங்கள், போக்குவரத்துக் கொள்கைகள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள அறிவுத் தெளிவு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை பரிமாறிக் கொள்வது; பகிர்ந்து கொள்வது.

ஆ. சாலைக் கட்டமைப்பு, தொழில்நுட்பம், சாலைகள்/நெடுஞ்சாலைகள் ஆகியவற்றை உருவாக்குவது, நிர்வகிப்பது ஆகியவை குறித்த திட்டமிடல், நிர்வாகம் மற்றும் மேலாண்மை.

இ. சாலைப் பாதுகாப்பிற்கான திட்டங்கள், சாலைப் பாதுகாப்பிற்கான தலையீட்டு வழிமுறைகள் மற்றும் சாலை விபத்துகளின் விளைவாக ஏற்படும் உயிரிழப்புகள், காயங்கள் ஆகியவற்றைக் குறைக்கும் நோக்கத்துடன் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவற்றை வளர்த்தெடுப்பதற்கான சிறப்பான செயல்முறைகள், தகவல்கள் ஆகியவற்றைப் பரிமாறிக் கொள்வது.

ஈ. பயன்படுத்துவோருக்கு எளிதான வகையில், மின்னணு முறையிலான நுழைவுக் கட்டண வசூலிப்பு முறை உள்ளிட்டு நவீன முறைகள், தொழில்நுட்பங்கள், செயல்முறைகள் ஆகிய நுழைவுக் கட்டண விஷயங்களில் சிறந்த நடைமுறைகள், தெள்ளறிவு ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வது.

உ. சாலை மற்றும் பாலங்கள் கட்டமைப்பு ஆகியவற்றில் கூட்டு ஆராய்ச்சி உள்ளிட்டு தொழில்நுட்பம், பொருட்களைப் பயன்படுத்துவது ஆகிய துறைகளில் தகவல்களைப் பரிமாறிக் கொள்வது.

ஊ. பொருளாதார வளர்ச்சிக்கான உந்துசக்தியாகவும், தொந்தரவுகளற்ற சரக்கு போக்குவரத்தை வழங்கும் வகையிலும் அதற்குத் தேவையான வசதிகளுக்கான பூங்காக்கள், சரக்குப் போக்குவரத்துக்கான வசதிகள், போக்குவரத்துக்கான கிடங்குகள், மதிப்புக் கூட்டுச் சேவைகள் போன்றவற்றை நிறுவ முதலீட்டைத் திரட்டுவதில் தகவல்களையும், ஒத்துழைப்பையும் பரிமாறிக் கொள்வது.

p>

*****