Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சிறு மற்றும் குறுந் தொழில்களுக்கு ஆதரவு தருவதற்காக, கடன் உத்தரவாத நிதியம் அமைப்பு.


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, சிறு மற்றும் குறுந் தொழில்களுக்கு ஆதரவு தருவதற்காக, கடன் உத்தரவாத நிதியம் ஒன்றை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்தது.

அத்திட்டத்தில் பின் வரும் அம்சங்கள் உள்ளன.

1) நிதியத்தின் முதலீட்டை ரூ 2500 கோடியிலிருந்து ரூ 7500 கோடியாக, முழுவதும் மத்திய அரசின் நிதி முதலீட்டில் செயல்படும் நிதியமாக மாற்றுவது.

2) கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் பெறப்படும் கடன்களுக்கான உத்தரவாதத் தொகையை ரூ 1 கோடியிலிருந்து ரூ 2 கோடியாக உயர்த்துவது.

3) வங்கியல்லாத நிதி அமைப்புகள் சிறு மற்றும் குறுந் தொழில்களுக்கு வழங்கப்படும் கடனையும் கடன் உத்தரவாத வளையத்தின் கீழ் கொண்டு வருவது. இது நிதியத்தின் மொத்த செயல்பாட்டை அதிகரிக்கும்.

இந்த நடவடிக்கைகள் கீழ்கண்ட பலனை அளிக்கும்.

நிதிக்கான அழுத்தத்தை குறைக்கும்.

நிதியத்தின் நிலைத்த தன்மையை உறுதி செய்யும்.

சிறு மற்றும் குறுந் தொழில்களுக்கான கடன் உத்தரவாதத்தின் வீச்சை அதிகரிக்க செய்யும்.

நிதி மேலாண்மையை மேம்படுத்தும்.

நிதி முதலீடு அல்லாத முதலீடுகளின் சார்பை குறைக்கும்.

நிதியத்தின் நிதி ஆதாரத்தை பெருக்குதல், சிறு மற்றும் குறுந் தொழில்களுக்கு வரும் கடன் முதலீட்டை அதிகரிக்க உதவும். இதனால் உற்பத்தி அதிகரிப்பதோடு வேலைவாய்ப்பை பெருக்கி, முதலீட்டை அதிகரிக்கும்.

மூன்றாவது நபரின் உத்தரவாதம் அல்லது உத்தரவாதம் இல்லாமல் இத்திட்டத்தின் கீழ் முதலீடு கிடைக்கும் என்பதால், புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களுக்கும், புதிய திட்டங்களுக்கும் இது பெருமளவு உதவும்.

இதில் பரிவர்த்தனைகள் அனைத்தும் இணையம் மூலம் நடைபெறுவதால் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.

*****