பி.எம்.இந்தியா
சிலி அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோஸ் அன்டோனியோ கஸ்த் ரிஸ்ட்டுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா – சிலி இடையே இனிய நட்பு ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், வர்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், அவருடன் நெருக்கமாகப் பணியாற்றுவதை தாம் எதிர்நோக்கி இருப்பதாக திரு மோடி கூறியுள்ளார். “வெற்றிகரமான பதவிக் காலத்திற்கு நல்வாழ்த்துகள்!” என்று திரு மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“சிலி அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோஸ் அன்டோனியோ கஸ்த் ரிஸ்ட்டுக்கு இனிய வாழ்த்துகள். இந்தியா – சிலி இடையே இனிய நட்பு ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், வர்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், அவருடன் நெருக்கமாகப் பணியாற்றுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன். வெற்றிகரமான பதவிக் காலத்திற்கு நல்வாழ்த்துகள்!”
@joseantoniokast
***
(Release ID: 2239457)
AD/SMB/RJ/RK
Warm congratulations to José Antonio Kast Rist on assuming the office of the President of Chile. I look forward to working closely with him to further strengthen the warm and friendly relations between India and Chile and to deepen our cooperation across trade, technology and…
— Narendra Modi (@narendramodi) March 13, 2026