Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சிவில் விமானப்போக்குவரத்துத் துறையில் ஒத்துழைப்புக் குறித்த இந்தியா – ஜெர்மனிக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்தி்ய அமைச்சரவை ஒப்புதல்


   சிவில் விமானப்போக்குவரத்துத் துறையில் ஒத்துழைப்புக் குறித்த இந்தியா – ஜெர்மனிக்கு இடையில் கையெழுத்தான இந்தியாவுக்கும் ஜெர்மனிககும் இடையேயான விருப்பம் குறித்த கூட்டுப்பிரகடனம் என தலைப்பு இடப்பட்ட  புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (27.06.2018) ஒப்புதல் அளித்தது.  இந்தக் கூட்டு பிரகடனம், பாதுகாப்பான திறம்பட்ட பயனளிக்கக் கூடிய இந்தியா – ஜெர்மனிக்கு இடையிலான விமானப்போக்குவரத்து மேம்பாட்டுக்கு உதவும்.

   கூட்டு விருப்பப் பிரகடனம் என்ற வடிவத்திலான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையே சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் முக்கியமான மைல் கல்லாகும். இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீடுகள், சுற்றுலா, பண்பாட்டு பரிவர்த்தனைகள் ஆகியவற்றை  ஊக்குவிக்கும் திறன் கொண்டது இந்த ஒப்பந்தம்.

    சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் அறிவு மற்றும் அனுபவ மேம்பாடு மற்றும் பரிவர்த்தனையை உயர்த்துவதற்கு இந்த கூட்டு விருப்பப் பிரகடனம் கையெழுத்திடப்பட்டது உதவிகரமாக அமையும். இருநாடுகளும், இத்துறையில் உறவுகளை வலுப்படுத்தி மேலும் வளர்ப்பதற்கான விருப்பத்தை இந்தப் பிரகடனம் எதிரொலிக்கிறது. இந்தக் கூட்டு விருப்பப் பிரகடனத்தின் முக்கிய நோக்கம் கீழ் கண்ட துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்புக்கு வசதி ஏற்படுத்தி மேம்படுத்துவது ஆகும்.

  1. விமானப்போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் விமானப்போக்குவரத்து மேலாண்மை

  விமானப்போக்குவரத்து பாதுகாப்பு செயல்பாடுகள், விமானப் போக்குவரத்து மேலாண்மை உள்ளிட்ட பாதுகாப்பு நெறிகள் தொடர்பான தகவல் மற்றும் சிறந்த நடைமுறைகளின் பரிமாற்றம். இது கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், பயணங்கள், மற்றும் இதர உகந்த நடவடிக்கைகள் மூலம் மேற்கொள்ளப்படும்.

  1. ஹெலிகாப்டர் தளங்கள் மற்றும் ஹெலிகாப்டர் அவசர மருத்துவ சேவைகள்

ஹெலிகாப்டர் தளங்கள் மற்றும் ஹெலிகாப்டர் அவசர மருத்துவ சேவைகள் சார்ந்த தகவல்கள் மற்றும்  சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளுதல்.

  1. வரன்முறைகள் மற்றும் கொள்கை

முக்கியமான சர்வதேச பிரச்சினைகளில் தொடர்ந்து சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்புடன் ஒத்துழைப்பு

  1. கம்பெனிகள் சார்ந்த மற்றும் வர்த்தக விமானப்போக்குவரத்து மேம்பாடு

 வர்த்தகம் மற்றும் வர்த்தகம் சாராத விமானப் போக்குவரத்துக்கான  வசதிகள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல்

  1. சுற்றுச்சூழல்
  1. நிலைத்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த விமான நிலையங்கள் மேம்பாடு மற்றும் திட்டமிடலில் முக்கிய கவனம் செலுத்தும் அரசு விமான நிலைய மேற்பார்வை சம்பந்தப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்.
  2. பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கு முக்கியத்துவம் தருவதைக் கருத்தில் கொண்ட சர்வதேச ஒத்துழைப்பு. இதன் மூலமாக உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைகளில் விமானப் போக்குவரத்து சார்ந்த பசுமை இல்ல வாயு வெளியீடுகள் பிரச்சினையை சமாளித்தல்.
  1. பயிற்சி மற்றும் திறன்மேம்பாடு

 தொழில்நுட்ப, தொழில்நுட்பம் சாராத ஒத்துழைப்ப  மற்றும் பயிற்சி குறிப்பாக விமான பாதுகாப்பு, கண்காணிப்புக் குறித்த பயிற்சியில் கூட்டாண்மை குறித்து ஆராய்தல்.

—–