Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்


சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகுந்த மனவேதனை அளிப்பதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு எனது ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ரயில்வே, தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

***