பி.எம்.இந்தியா
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சுகாதாரத் துறையில் இந்தியா மற்றும் மாசிடோனியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கீழ்க்காணும் பகுதிகளில் ஒத்துழைப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளடக்குகிறது:-
i. சுகாதாரத் துறையில் திறன் உருவாக்கம் மற்றும் குறுகிய கால பயிற்சி
ii. மருத்துவர்கள், அதிகாரிகள் மற்றும் சுகாதார தொழில் நிபுணர்கள் மற்றும் நிபுணத்துவம் பெற்றவர்கள் பரிவர்த்தனை மற்றும் பயிற்சி
iii. மனித வளம் மற்றும் சுகாதார கவனிப்பு வசதிகளை அமைக்க உதவி
iv. பரஸ்பரம் முடிவு செய்யப்படும் ஒத்துழைப்புக்கான இதர பகுதிகள்
ஒத்துழைப்புக்கான விவரங்களை விரிவாக விவரிக்கவும் அது நடைமுறைப்படுத்தப்படுவதை மேற்பார்வையிடவும் பணிக்குழு ஒன்று அமைக்கப்படும்.
****