Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

‘சுகாதாரம் குறித்து உலக நாடுகளை அழைக்கும் செயல் மாநாடு – 2015ல் பிரதமரின் உரை

‘சுகாதாரம் குறித்து உலக நாடுகளை அழைக்கும் செயல் மாநாடு – 2015ல் பிரதமரின் உரை

‘சுகாதாரம் குறித்து உலக நாடுகளை அழைக்கும் செயல் மாநாடு – 2015ல் பிரதமரின் உரை

‘சுகாதாரம் குறித்து உலக நாடுகளை அழைக்கும் செயல் மாநாடு – 2015ல் பிரதமரின் உரை

‘சுகாதாரம் குறித்து உலக நாடுகளை அழைக்கும் செயல் மாநாடு – 2015ல் பிரதமரின் உரை

‘சுகாதாரம் குறித்து உலக நாடுகளை அழைக்கும் செயல் மாநாடு – 2015ல் பிரதமரின் உரை

‘சுகாதாரம் குறித்து உலக நாடுகளை அழைக்கும் செயல் மாநாடு – 2015ல் பிரதமரின் உரை

‘சுகாதாரம் குறித்து உலக நாடுகளை அழைக்கும் செயல் மாநாடு – 2015ல் பிரதமரின் உரை


மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் திரு. ஜே.பி. நத்தா அவர்களே, எத்தியோப்பியா நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் திரு. கெசிடிபிரிகன் அட்மாசு அவர்களே, இங்கு பங்கு கொள்ளும் மற்ற நாடுகளின் அமைச்சர்களே, வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடும் பிரதிநிதிகளே, தனியார்துறை, ஊடகம், கல்வி, ஆகிய துறைகளில் உள்ள தேசிய சர்வதேச பிரதிநிதிகளே, உங்கள் அனைவரையும் உலக அளவில் உடல் நலம் பற்றிய செயல்பாடு குறித்த உச்சி மாநாட்டிற்கு வரவேற்கிறேன்.

அமெரிக்காவிற்கு வெளியே முதல்முறையாக நடைபெறும் உச்சி மாநாடு இது. என்னுடைய அரசு இந்த உச்சி மாநாட்டை நடத்துவதில் பெருமை கொள்கிறேன். இந்த மாநாட்டிற்கு வெகுதூரத்திலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளை இந்தியாவிற்கும், புதுதில்லிக்கும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று காலை உங்களோடு இருப்பதிலும் மகிழ்ச்சி அடைகிறேன்.

தாய், சேய் நலன் குறித்த பிரிவில் நாடுகள் அடைந்துள்ள சாதனைகள் குறித்து இந்த இரண்டு நாள் உச்சி மாநாட்டில் விவாதிக்கப்படும். தாய் மற்றும் சேய் ஆகியோரின் இறப்பைத் தடுக்க ஒருங்கிணைந்த தலைமை இருக்கும்போது, இது முடிவுக்கு கொண்டு வரப்படும். புதிய முறைகள் மற்றும் கூட்டு முயற்சிகள் மூலமும் நாம் இதில் தாய் சேய் இறப்பை தடுக்க முடியும். நம்மை எதிர்நோக்கும் சவால்களை சந்தித்து, நாம் விரும்பும் இலக்கை அடைய இந்த உச்சி மாநாடு நமக்கு உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

அடுத்த 15 ஆண்டுகள் இந்த உலகை நாம் எப்படி மாற்றி அமைக்கிறோம் என்பதை வைத்துத்தான் இந்த உலகம் வளமான, நன்னம்பிக்கையுள்ள நாடுகளை உருவாக்குகிறோமா அல்லது பாதுகாப்பற்ற மற்றும் அமைதியற்ற நாடுகளை உருவாக்குகிறோமா என்று முடிவு செய்யும். தாய், சேய் இறப்பைத் தடுக்க 24 நாடுகள் இங்கு ஒன்றிணைந்தது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். ‘உடல் நலம் பற்றிய செயல்பாடு’ என்ற கொள்கை நம் அனைவருக்கும் பொருந்தும் என்பதால் அந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆயிரமாவது ஆண்டுகளுக்கான வளர்ச்சி இலக்குகளிலிருந்து நிலைத்திருக்கக் கூடிய வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு தேவையான உத்திகளைப் பற்றி நாம் உரையாட இங்கு வந்துள்ளோம். உலகில் தற்போது இரண்டு லட்சத்து 89 ஆயிரம் தாய்மார்களும் 5 வயதிற்குட்பட்ட 63 லட்சம் குழந்தைகளும் ஒவ்வொரு ஆண்டும் இறக்கின்றனர் என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும். இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் 24 முன்னணி நாடுகளில் 70 சதவீதம் அளவிற்கு தாய் சேய் இறப்பு தடுக்கப்படக் கூடியது. இந்தியாவில் 26 மில்லியன் குழந்தைகளின் பிறப்பு இருந்தாலும் சவால்கள் அதிகமாக உள்ளன. அதேநேரத்தில், அவற்றை எதிர்கொள்வதும் வலுவான நிலையில் உள்ளது. இவற்றில் பல இறப்புகளை சில எளிதான முறைகளின் மூலம் தடுக்க இயலும். இந்த உச்சி மாநாட்டில் இது முக்கியமானதாக உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபர் இங்கு பயணம் மேற்கொண்ட போது இது பற்றிய அறிக்கையில் ஒன்றிணைந்த தலைமை தேவை என்றும், அதன் மூலம் தாய் மற்றும் சேய் ஆகியோரின் இறப்பை தடுக்க முடியும் என்பதையும் நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம்.

தாய் சேய் நலத்திற்காக உலக அளவில் சாதனைகள் புரியப்பட்டுள்ளன. ஆயினும், மேலும் இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. 1990ஆம் ஆண்டு இந்தியாவில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 126 ஆக இருந்தது. உலக அளவில் இது 90 ஆக இருந்தது. 2013ஆம் ஆண்டு இது 49 ஆக குறைந்தது. உலக அளவில் அப்போது 46 ஆக குறைந்தது. உலக அளவில் 1991 ஆம் ஆண்டு 31 புள்ளிகளாக இருந்தது. 3 புள்ளிகளாக 2013ஆம் ஆண்டு குறைந்தது. இதன் மூலம் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் உலக அளவை பார்க்கும்போது மிகவும் குறைந்தது என்பது தெரிய வந்துள்ளது. இதில் இருந்து தெரிய வருவது என்னவென்றால், தற்போதுள்ள நிலை நீடித்தால் இந்தியா ஆயிரமாவது ஆண்டுகளுக்கான வளர்ச்சி இலக்கை எட்டும்.

இந்த சாதனையோடு போலியோ நோய் ஒழிப்புத் திட்டத்திலும் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையைப் படைத்துள்ளது. இந்தியா போலியோ இல்லாத நாடாக 2014 மார்ச் மாதம் 27ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு உலகில் உள்ள மொத்த போலியோ நோய் தாக்கப்பட்டவர்களில் பாதி அளவு இந்தியாவில் இருந்தனர். ஆனால், இந்தியா போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது, குழந்தைகள் உடல் நலனில் இந்தியா முன்னேறியுள்ளது என்பதை காட்டுகிறது.

இந்தியா மீண்டும் ஒரு மைல் கல்லை எட்டியுள்ளது என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். டெட்டனஸ் தாக்குவதால் தாய் மற்றும் பச்சிளம் குழந்தை இறப்பு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக அடையப்பட வேண்டிய இலக்கை அதற்கு முன்பே அடைந்து விட்டோம். மற்ற பிரிவுகளிலும் இலக்குகள் அடையப்பட்டு சாதனை புரியப்படும் என்ற உறுதி நம்மிடையே உள்ளது.

போலியோ இல்லாத மற்றும் டெட்டனஸ் மூலம் இறப்பு இல்லாத நாடாக தொடர்ந்து இருக்க வேண்டுமெனில் நாட்டின் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போட வேண்டியது அவசியமாகிறது. இந்திர தனுஷ் என்ற திட்டத்தின் மூலம் எனது அரசு உலகிலேயே பெரிய அளவில் தடுப்பூசி அளிக்கும் திட்டத்தையும் செயலாற்றி வருகிறது. தடுப்பூசிகள் போடப்படாத வர்களுக்கும் இந்த இயக்கத்தின் மூலம் தடுப்பூசிகள் போடப்படும். ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசி போடப்படும் திட்டத்தின் அளவு விகிதம் ஒரு சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. 2020ஆம் ஆண்டுக்குள் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசிகள் அளிக்கப்பட்டு சாதனை புரியப்படும். இதுபோன்ற இயக்கம் இல்லையெனில் இந்த சாதனையை 25 ஆண்டுகளில் தான் நிகழ்த்த முடியும். இத்திட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி இன்றி, இந்தியாவில் குழந்தைகள் இறக்காமல் இருக்க இத்திட்டத்தின் மூலம் உறுதி செய்யப்படும்.

தாய் சேய் உடல் நலம் குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண உலக அளவில் செயல்படுத்தப்படும் முயற்சிகளுக்கு இந்தியா எப்போதும் ஒன்றிணைந்துள்ளது. 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் உடல் நலம் பற்றிய உலக நாடுகளின் மாநாட்டில் ஒவ்வொரு புதிய குழந்தை இறப்பிற்கும் உடல் நலம் காக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, குழந்தை பிறந்தவுடன் இறக்கும் விகிதம் குறைவதற்கு இந்தியா தான் உலக அளவில் முதல் நாடாக இருந்தது. 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா பிறந்த குழந்தைகளுக்கு உடல் நலம் காக்கும் திட்டத்தை அறிவித்தது. 2030ஆம் ஆண்டிற்குள் பிறந்த குழந்தை இறக்கும் விகிதம் மற்றும் இறந்தே பிறக்கும் குழந்தை விகிதம் ஆகியவற்றை ஒற்றை இலக்கத்தில் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. உலக அளவில் உடல் நலம் பற்றிய செயல்பாடு கொள்கைக்கும் இந்தியாதான் முதன்முதலாக செயல்பாட்டில் இறங்கியுள்ளது.

தேசிய சுகாதார இயக்கத்தின் வாயிலாக தாய் சேய் நலனைக் காப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றிகள் பெறப்பட்டுள்ளன. உலகிலேயே மிகப்பெரிய அளவிலான இத்திட்டம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் உடல் நலத்தைக் காக்கும் வகையில் உள்ளது. 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு முக்கியக் காரணமாக இருந்தது பிறந்த குழந்தைகள் ஒரு மாதத்திலேயே இறந்ததுதான். தேசிய சுகாதார இயக்கம் பிறந்த குழந்தைகளைப் பாதுகாக்க சமுதாய அளவிலும், வசதிகளை அளிப்பதன் மூலமும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கருவுற்ற பெண்கள் பாதுகாப்பான குழந்தைப்பேறு பெற மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனனி சுரக்ஷா திட்டத்தை நாங்கள் துவக்கியுள்ளோம். இதன் மூலம் பொது சுகாதார நிலையங்களில் குழந்தை பெறும் பெண்களுக்கு ஊக்கத்தொகை நேரடியாக அளிக்கப்படுகிறது. இதனால், 75 சதவீதத்திற்கும் மேலான குழந்தைப் பேறுகள் எங்களது சுகாதார நிலையங்களில் நடக்கிறது. இதனால், தாயின் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்தில் பெண்கள் உடல் நலம் மற்றும் சேவைகளுக்கு மேலும் ஆகும் செலவை அவர்களால் செய்ய முடியவில்லை என்பதை நாங்கள் அறிவோம். இதற்காக ஜனனி சிசு சுரக் ஷா கார்யாக்கிரம் (தாய் சேய் நலத் திட்டம்) என்ற திட்டத்தி துவக்கியுள்ளோம். இத்திட்டத்தின் மூலம் பொது சுகாதார நிலையங்களில் குழந்தைப்பெறும் பெண்களுக்கும் பிறந்த குழந்தைகளுக்கும் சுகாதார சேவைகள் இலவசமாக கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. மருந்துகள், உணவு வகைகள், போக்குவரத்து வசதிகள் போன்றவை இலவசமாக அளிக்கப்படுகின்றன. இதன் மூலம் பொது சுகாதார நிலையங்களில் குழந்தைப்பேறு நடப்பது அதிகரித்துள்ளது.

தாய்மார்களுக்கு மட்டும் இதுபோன்ற சுகாதார வசதிகள் அளிக்கப்படுவதில்லை. தாய் சேய் சுகாதார வசதிகளை தொடர்ந்து கவனிக்கத் திட்டம் ஒன்று நாடு முழுவதும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலமாக 92 மில்லியன் தாய்மார்களும், 72 மில்லியன் குழந்தைகளும் பயனடைந்து வருகின்றனர்.

சமமான அளவு சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை என்பது கவலை அளிக்கக்கூடிய விஷயமாகும். ஆகவே, இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் சமமான அளவு சுகாதார சேவைகள் கிடைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் உள்ள 184 மாவட்டங்கள் தெரிந்தெடுக்கப்பட்டு, இதற்காக சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அந்தப் பகுதிகளில் திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

எனது அரசின் மிக முக்கியமான இன்னொரு திட்டம் தூய்மை இந்தியா இயக்கமாகும். இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக சுகாதார அமைச்சகம் காயக்கல்ப் என்ற திட்டத்தை துவக்கியுள்ளது. இதன் மூலம் சுற்றுப்புற சுகாதாரம் மேம்பட பொது சுகாதார வசதிகள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன. சுகாதாரம் மிகுந்த நாடாக மாற வேண்டுமெனில் சுற்றுப்புற சுகாதாரம் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதற்காக “பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ” என்ற திட்டம் துவக்கப்பட்டுள்ளது. சமுதாயத்தில் பெண் குழந்தைகள் பாதுகாக்கப்பட்டு, அவர்கள் சிறந்து பணியாற்றுவதற்கு இத்திட்டம் உதவும்.

துரதிருஷ்டவசமான நோய் தாக்குதலால் சிலர் ஏழ்மையாகின்றனர். நலிவுற்ற சமுதாயத்தினர் சிறந்த உடல் நலத்தை பெறவும் அவர்களது நிதி நிலையை பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டியது அவசியம். நாம் ஒருவருக்கொருவர் இதைப்பற்றி புரிந்து கொள்வது அவசியம். தாய் சேய் இறப்பைத் தடுப்பது மற்றும் வளர் இளம் பெண்களுக்கு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது ஆகியவை குறித்து, இந்தியாவின் நிலையை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது. இது குறித்த செயல் திட்டங்களை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

நமக்கு மட்டுமின்றி, மேலும் இங்கு கூடியுள்ள 24 நாடுகளுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கே ஒரு செய்தியை நாம் கூற உள்ளோம். ஒவ்வொரு பெண்ணும், குழந்தையும் காக்கப்பட வேண்டியதை நாம் உறுதிப்பாட்டுடன் இருக்க வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் இவ்விஷயத்தில் ஒன்றிணைய வேண்டும். நம் நாட்டில் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்வதோடு மட்டுமில்லாமல் உலக நாடுகள் இதற்காக ஆதரவு தேவையெனில் நாங்கள் அதற்கு உதவி செய்வோம். இது என்னுடைய கருத்தாகவும், அரசின் உறுதிப்பாடாகவும் உள்ளது.

இங்கு கூடியுள்ள நாடுகள் உலகிற்கு எதாவது ஒன்றை அளிக்கும் நிலையில் இருந்தாலும் இந்தியா தனது அனுபவத்தை இங்கு அளிக்க உள்ளது. இந்தியா பல திட்டங்களில் சிறந்த முறையில் செயலாற்றியுள்ளது. இதை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். சார்க் நாடுகளில் போலியோ நோய் ஒழிப்பிற்கு தேவையான உதவிகளை இந்தியா வழங்கும் என்று சென்ற ஆண்டு அறிவித்திருந்தேன். அந்த நாடுகளுக்கு போலியோ ஒழிப்புக்கு தேவையான பெண்டாவேலன்ட் தடுப்பூசி அளிக்கப்படும் என்றும் நான் அறிவித்திருந்தேன். உலக சமுதாயத்திற்கு எங்களது அனுபவங்களையும் நாங்கள் வழங்குவோம்.

தொழில் நுட்பம் மற்றும் திட்டங்களை செயல்படுத்துதல் போன்றவற்றிற்கு இந்தியா உதவி செய்ய தயாராக உள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை தடுக்கும் நிர்வாகத்திற்கு தேவையான பயிற்சியை புதிய குழந்தைப் பிறப்பு பாதுகாப்பு சிறப்பு பிரிவுகள் மூலம் அளிக்க எங்களால் இயலும். சர்வதேச தடுப்பூசி திட்டத்தின் மூலம் எங்களுக்கு கிடைத்த அனுபவங்களைக் கொண்டு இந்திர தனுஷ் இயக்கத்தை துவக்கியுள்ளோம். இதை மற்ற நாடுகளுடன் நாங்கள் பகிர்ந்து கொள்ள முடியும். சார்க் நாடுகளுக்கு நாங்கள் இதை ஏற்கனவே தெரிவித்துள்ளோம். இங்கு கூடியுள்ள நாடுகள் அனைத்திற்கும் நான் இதை மீண்டும் கூறிக் கொள்கிறேன். போலியோ நோய் ஒழிப்பிற்கு ஆதரவு அளிப்பதோடு இதற்கும் நாங்கள் ஆதரவு அளிப்போம்.

சர்வதேச உச்சி மாநாட்டிற்கு மீண்டும் உங்களை வரவேற்கிறேன். தாய் சேய் இறப்பை தடுப்பதற்கு தேவையான வழிமுறைகளை அடுத்த இரு நாட்களில் உலக சமுதாயத்திற்கு தகுந்த வழிமுறைகளை இந்த உச்சி மாநாடு அளிக்கும் என்று நான் நம்புகிறேன்.

புதுதில்லியில் நீங்கள் தங்குவது இனிமையாக அமையட்டும்.

நன்றி,

ஜெய் ஹிந்த்.

•••••••