Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுகாதாரம் மற்றும் நலத் துறையில் இந்தியா – ஜப்பான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்


 

சுகாதாரம் மற்றும் நலத்துறையில் இந்தியா – ஜப்பான் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.

 

அமலாக்கம் மற்றும் இலக்குகள்

 

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடப்பட்ட நகல்கள் இருதரப்பிற்கும் சென்றடைந்த பிறகு இது தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கப்படும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறப்பட்டது போல் இரு நாடுகளும் இதுதொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வரும்.

புரிந்துணர்வின் தாக்கம்.

 இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையே பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும்.

 

செலவு

இதில் எந்தவிதமான கூடுதல் நிதிச் செலவும் இல்லை இது தொடர்பான அனைத்து செலவுகளும் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் ஏற்கனவே உள்ள திட்டத்தின் கீழ் செலவு செய்யப்படும்

 

***