பி.எம்.இந்தியா
சுகாதாரம் மற்றும் மருத்துவ விஞ்ஞானம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான இந்தியா – பாப்புவா நியு கினியா புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்தது.
சுகாதாரத் துறையில் கூட்டுத் திட்டங்கள் மூலம் மத்திய சுகாதாரம் குடும்பநலத்துறை அமைச்சகத்துக்கும் பாப்புவா நியு கினியா சுகாதார மற்றும் HIV / AIDS அமைச்சகத்துக்கும் இடையிலான இந்த இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும். இந்தியாவுக்கும் பாப்புவா நியு கினியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளையும் இந்த ஒப்பந்தம் வலுப்படுத்தும்.