பி.எம்.இந்தியா
சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் பாலஸ்தீனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த உடன்பாடு, மே 16, 2017-ல் கையெழுத்தானது.
இந்த புரிந்துணர்வு உடன்பாடு, கீழ்க்காணும் பகுதிகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்துகிறது: –
அ. சுகாதாரப் பணியாளர்களின் திறனை வலுப்படுத்துதல்
ஆ. தொற்று நோய்களை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பது
இ. உடலியக்கப் பயிற்சி மற்றும் மறுவாழ்வு
ஈ. மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்
உ. பரஸ்பர நலனுக்காக மற்ற ஏதாவது பிரிவுகள்.
ஒத்துழைப்புக்கான விவரங்களை மேலும் எடுத்துரைக்கவும், புரிந்துணர்வு உடன்பாட்டின் செயல்பாடுகளை மேற்பார்வையிடவும் பணிக் குழு அமைக்கப்படும்.