பி.எம்.இந்தியா
சுகாதாரா ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி கீழ்கண்ட துறைகளில் ஒத்துழைப்பு ஏற்படுத்தப்படும்.
1. ஆய்வு மற்றும் வளர்ச்சி, மருந்து செயல்பாட்டினை ஊக்குவிக்கும் உட்பொருட்கள். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மருத்துவ உபகரணங்கள்.
2. மனித வள மேம்பாடு
3. சுகாதார சேவைகள் மற்றும்
4. இரு தரப்பும் ஒப்புக்கொள்ளும்படி மற்ற துறைகளில் ஒத்துழைப்பு
இந்த ஒத்துழைப்பினை மேலும் விரிவாக்கவும் இந்த ஒப்பந்தத்தின் செயல்பாட்டை மேற்பார்வை செய்யவும் பணிக்குழு அமைக்கப்படும்.
************