பி.எம்.இந்தியா
சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாழ்க்கைத் துணையினர், தகுதி வாய்ந்த மகள்கள், அவரைச் சார்ந்து வாழும் நிலையில் உள்ளவர்கள் ஆகியோருக்கு “ஸ்வதந்திரதா சைனிக் சம்மான் பென்ஷன் திட்டத்தின்” (SSSPS, 1980) கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையை உயர்த்தி, முன் தேதியிட்டு அமல்படுத்துவதற்கா பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதன்படி தற்போது ஓய்வூதியம் பெறும் தியாகிகளுக்கும் அவர்களது வாரிசுகளுக்கும் வழங்கப்பட்டு வரும் மத்திய ஓய்வூதியத் திட்டம் கீழ்க்கண்டவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது:
|
1. |
அந்தமான் சிறைக்கைதிகளாக இருந்த தியாகிகள்/அவர்களின் வாழ்க்கைத் துணை |
ரூ. 24,775 |
ரூ. 30,000/- |
|
2. |
பிரிட்டிஷ் இந்தியாவுக்கு வெளியே இருந்த தியாகிகள்/ அவர்களின் வாழ்க்கைத் துணை |
ரூ. 23,085/- |
ரூ. 28,000/-
|
|
3. |
இந்திய தேசிய ராணுவம் உட்பட இதர தியாகிகள் / அவர்களின் வாழ்க்கைத் துணை |
ரூ.21,395/- |
ரூ.26,000/-
|
|
4. |
பெற்றோரைச் சார்ந்து வாழ்வோர்/தகுதியான மகள்கள் (எந்த நிலையிலும் அதிகபட்சம் மூவர்) |
ரூ. 3,380/- |
தியாகிகளுக்கு அனுமதிக்கப்பட்ட ஓய்வூதியத்தில் 50 விழுக்காடு. அதாவது, ரூ. 13,000 முதல் ரூ. 15,000 வரை |
வரிசை எண். | தியாகிகளின் வகை | தற்போது வழங்கப்படும் ஓய்வூதியம் (மாதந்தோறும்) | உயர்த்தப்படும் ஓய்வூதியம் (மாதந்தோறும்) |
|---|
(i) திருத்தப்பட்ட ஓய்வூதியத் தொகை 15.08.2016 முதல் அமலுக்கு வருகிறது. மேலும், திருத்தப்பட்ட மொத்த ஓய்வூதியத் தொகையின் அந்தந்த பிரிவு தியாகிகளின் அடிப்படை ஓய்வூதியமாகக் கருதப்பட்டு, அதற்கேற்ப அகவிலைப்படி (டி.ஏ.) கணக்கிடப்படும்.
(ii) தற்போது ஆலைத்தொழிலாளர்களுக்கு அகில இந்திய நுகர்வோர் விலைப்பட்டியல் அடிப்படையில் வழங்கப்படும் அகவிலைப்படி (டி.ஏ.) வழங்கும் முறையே சுதந்திரப் போராட்ட தியாகிகளின் ஓய்வூதியத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததது. இந்த நடைமுறை நீக்கப்படுகிறது. மத்திய அரசு பணியாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் வழங்கப்படும் அகவிலைப்படி முறையே சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கும் வழங்கப்படும். இது ஓய்வூதியர்களுக்கான “அகவிலைப்படி” என அழைக்கப்படும்.
சுதந்திரப் போராட்டத்தில் உயிர்துறந்த தியாகிகளின் வாழ்க்கைத் துணையினர், தகுதி வாய்ந்த மகள்கள், அவரைச் சார்ந்து வாழும் நிலையில் உள்ளவர்கள் ஆகியோருக்கு “ஸ்வதந்திரதா சைனிக் சம்மான் பென்ஷன் திட்டத்தின்” (SSSPS, 1980) கீழ் ஓய்வூதியம் பெறும் அனைவரும் இதன் மூலம் பயன் பெறுவர்.
பின்னணி
. அந்தமான் போர்ட் பிளேரில் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டு தியாகம் செய்தோரை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு “அந்தமான் முன்னாள் அரசியல் கைதிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தை 1969 ஆம் ஆண்டு கொண்டுவந்தது. இந்திய சுதந்திரத்தின் வெள்ளி விழா ஆண்டைக் கொண்டாடும் விதத்தில், ஓய்வூதியம் வழங்குவதற்கு முறையான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பின்னர், 1.8.1980ஆம் தேதி அத்திட்டத்தைத் தளர்த்தி, ஸ்வதந்திரதா சைனிக் சம்மான் பென்ஷன் திட்டத்தின்” (SSSPS, 1980) அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, தியாகிகள் மட்டுமின்றி, அவர்களது வாழ்க்கைத் துணைகள், அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவர்கள், திருமணமாகாத, வேலையில்லாத மகள்கள் (அதிகபட்சம் மூன்று பேர்), உயிர்துறந்த தியாகியரின் பெற்றோர் ஆகியோரும் ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்களும் இத்திட்டத்தின் கீழ் இடம்பெறுகின்றனர். இதன்படி, 2016 ஆம் ஆண்டு வரையில், தியாகிகள், தகுதியுள்ள அவர்களது குடும்பத்தினர் திருமணமாகாதோர் என மொத்தம் 1,71,605 பேர் இந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயனடைகின்றனறர். தற்போது, 37,981 தியாகிகள், அவர்களது குடும்பத்தினர் பயனடைகின்றனர். அவர்களில்11,690 பேர் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் ஆவர். 24,792 பேர் அவர்களது வாழ்க்கைத் துணைகள் ஆவர். 1,490 பேர் தியாகிகளின் மகள்கள் ஆவர். இது தொடர்பாக அனுமதிக்கப்பட்ட வங்கிகள் ஆதார் அட்டை தொடர்புடன் ஓய்வூதியத்தை விரைவாக வழங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
*****