Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு தயாராகிறது தேசம்


70 – வது சுதந்திர தினத்தை இந்த நாடு நாளை பெருமிதத்துடன் கொண்டாடுகிறது. இதனையொட்டி ஆகஸ்ட் 15, 2016 அன்று காலை சுமார் 7.30 மணியளவில் செங்கோட்டையில் இருந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதுடன் அந்த நாளிலும் அதைத் தொடர்ந்து வரும் நாட்களிலும் மக்களிடையே தேசப்பற்று உணர்வை ஏற்படுத்துவதற்காக தொடர் நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் சுதந்திர போராட்ட வீரர் சந்திரசேகர் ஆசாத் பிறந்த இடத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி திரங்கா யாத்திரையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். மூவண்ணக் கொடியைக் கையில் ஏந்தியபடி அனைத்து பிரிவு மக்களிடையே தேசபக்தி உணர்வை ஏற்படுத்துவதே இந்த யாத்திரையின் நோக்கமாகும். இந்த திரங்கா யாத்திரை ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி வரை நடத்தப்படுவதுடன் இதில் 75 அமைச்சர்கள் சுதந்திர போராட்டத்துடன் தொடர்புடைய 150 இடங்களுக்குப் பயணம் செய்வார்கள். ஏழு பெண் அமைச்சர்கள் நாட்டின் எல்லைப் பகுதிக்கும் சென்று ராணுவ வீரர்களுக்கு ராக்கி அணிவிப்பார்கள்.

மத்திய கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் புதுதில்லியில் உள்ள ராஜ்பத் புல்வெளியில் பார்த் பர்வ் என்ற நிகழ்ச்சி ஒரு வார காலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களிடையே தேச பக்தி உணர்வை ஏற்படுத்துவதும், நாட்டின் கலாச்சார பரவலை மேம்படுத்துவதும், மக்கள் அதிக அளவில் இதில் பங்கேற்பதை உறுதிப்படுத்துவதும் இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி தில்லி ராஜ்பத் புல்வெளிகளில் பாரத் பர்வ் நிகழ்ச்சியை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு. வெங்கய்யா நாயுடு. கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் திரு. மகேஷ் சர்மா ஆகியோர் முன்னிலையில் பாதுகாப்பு அமைச்சர் திரு. மனோகர் பாரிக்கர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை கட்டணமின்றி பொது மக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம். பாதுகாப்பு படைகளின் பேண்டு வாத்திய இசைக்குழுக்கள், 50 அரங்குகளில் பல்வேறு விதமான உணவு வகைகள், கைவினைப் பொருட்களின் மேளா, நோக்கம் சார்ந்த 17 முனையங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்கள், பிராந்திய சங்கங்கள்/அமைப்புகள்/கலச்சார மற்றும் சமூக அமைப்புகளின் கலாச்சார நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றுள்ளன. “விடுதலை பெற்று 70 ஆண்டுகள் – நினைவு கொள்வோம் தியாகத்தை” என்ற பெயரில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் புகைப்பட கண்காட்சி இங்கு வைக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினக் கொண்டாட்டத்தை மக்களின் கொண்டாட்டமாக ஆக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு பிரத்தியேக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 12 முதல் புதுதில்லியில் உள்ள சிரிபோர்ட் கலையரங்கில் ஒரு வார காலத்திற்கு சுதந்திர தின திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. சுதந்திர தின நோக்க பாடலான ‘திரங்கா யாத்ரா’ அதே நாளில் அறிமுகப்படுத்தப்பட்டது. ரவீந்திர நாத் தாகூர், பங்கிம் சந்திர சாட்டர்ஜி, முகம்மது இக்பால், கவி பிரதீப், ஷகீல் பதாயுனி, நவ்ஷத், பீதாம்பர் தாஸ் மற்றும் இதர தேசபக்தி பாடல் எழுதியவர்களின் வாழ்க்கை சரிதம் மற்றும் பாடல்கள் முதல் முறையாக தெலுங்கில் ஆச்சார்யா ஆத்ரேயா 1972 – ல் தெலுங்கில் எழுதி வெளியிட்ட பாரத்மாதாகு ஜெய் ஜெஜெலு போன்றவை சிறு குறிப்பாக ஒவ்வொரு பாடல் இசைக்கப்படும் முன்னர் ஒலிபரப்பப்படுகிறது. சுதந்திர தின கொண்டாட்டம் குறித்த இணைய பக்கம் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு அதில் ஆவணப் புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் ஒலிநாடாக்கள், சமூக ஊடக இணைப்புகள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஹீரோக்கள் குறித்த உண்மைகள் மற்றும் கிராஃபிக்ஸ், பத்திரிகைச் செய்திகள் மற்றும் சிறப்பு அம்சங்களுடன் பிரதமரின் உரைகள் இடம்பெற்றுள்ளன. டுவிட்டர் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அரசு திட்டமிட்டுள்ள பல்வேறூ நிகழ்ச்சிகள் குறித்து மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்த பயன்படுத்த்ப்படுகிறது.

நாட்டில் உள்ள அனைத்து முக்கிய நினைவிடங்களும் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள் முக்கிய பிரபலங்களை அழைத்து சுதந்திர போராட்டம் குறித்த உரைக்கு ஏற்பாடு செய்யும். தங்களது நகரங்களில் உள்ள தியாகிகளின் பிறப்பிடங்கள்/சிலைகள்/நினைவிடங்கள் ஆகியவற்றுக்கு விஜயம் செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள். ஆகஸ்ட் 23ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு நாடு முழுவதும் உள்ள 15 லட்சம் பள்ளிகள் மற்றும் 40 ஆயிரம் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேசிய கீதம் இசைக்கும் நிக்ழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கட்டுரை எழுதுதல், வினாடி வினா, விவாதங்கள், ஓவியம் மற்றும் தேசபக்திப் பாடல்கள் இசைத்தல் நடத்தப்படும். மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பல்வேறு இதர சுதந்திர போராட்ட வீரர்கள் போல் ஆடையணிந்து கொள்ளுதல் போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சுதந்திரத்தின் வண்ணங்கள் என்ற தலைப்பில் நாடு தழுவிய இயக்கம் ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறுகிறது. இது இந்த நிகழ்ச்சி தேசிய போராட்ட முக்கியத்துவம் வாய்ந்த 70 நகரங்களில் நடக்கும். ரக்ஷாபந்தன் நாளன்று அதாவது ஆகஸ்ட் 18 அன்று பெண் அமைச்சர்கள் நாட்டின் எல்லைப் பகுதிகளுக்குச் சென்று ராணுவ வீரர்களுக்கு ராக்கி அணிவிப்பார்கள். கிழக்கு கமாண்ட் பகுதியில் தெங்கா மற்றும் பைசாகி, வடக்கு கமாண்ட் பகுதியில் பாரமுல்லா மற்றும் குப்வாரா ஆகிய எல்லைப்பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கு மத்திய அரசின் பெண் அமைச்சர்கள் விஜயம் செய்வார்கள்.

சுதந்திர தினம் என்பது. இந்த நாட்டுக்காக தங்களது இன்னுயிரை ஈந்த ராணுவ வீரர்களின் தியாகத்தையும் நினைவு கூறும் நேரமாகும். தேச பக்தி உணர்வுடன் இந்த விழாக்களில் பங்கேற்க மக்கள் காட்டிய ஆர்வம் இந்த கொண்டாட்டத்தை மக்கள் திருவிழாவாக மாற்றியுள்ளது. இந்த தேச பக்தி உணர்வை ஏற்படுத்துவதிலும் நமது கலாச்சார பரவலை மேம்படுத்துவதிலும். மக்கள் அதிக அளவில் இதில் பங்கேற்பதை உறுதி செய்வதிலும் இது நெடும் பயணமாகும்.