பி.எம்.இந்தியா
சுற்றுச்சூழல், பருவநிலை இயக்கவியல் எதிர்காலம் குறித்த சர்வதேச மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
தேசிய பசுமைப் தீர்ப்பாயத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு, புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இம்மாதம் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் நிபுணர்கள், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகள் பல்வேறு அமைச்சகங்களின் செயலாளர்கள், அரசு அதிகாரிகள், மாநில நீதித்துறைப் பயிற்சி மையங்கள், மாநில சட்டச் சேவை ஆணையங்கள், நிபுணர் மதிப்பீட்டுக் குழுக்கள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையங்கள், மாநில சதுப்பு நில ஆணையங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்கின்றனர். மேலும், 17 நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள், நீதித்துறை பிரதிநிதிகளும் இதில் பங்கேற்கின்றனர்.
பல்வேறு அதிகார வரம்புகளுக்கு இடையே நீதித்துறையின் செயல்பாடுகள், அறிவியல் சார்ந்த திறனறிவு, சுற்றுச்சூழல் நிர்வாக நடைமுறைகள், அமைப்பு ரீதியான அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வதற்கானத் தளமாக இந்த மாநாடு அமையும்.
கொள்கை உருவாக்கம், செயல்படுத்துதல் ஆகியவற்றிலுள்ள இடைவெளிகள் உள்ளிட்ட சுற்றுச்சூழல், பருவநிலை தொடர்பான சவால்கள் குறித்த இம்மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311972®=3&lang=1
***
SS/SV/PS/SH