Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுற்றுலாத்துறையில் இந்தியா – பராகுவே இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா – பராகுவே இடையே சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பின்னேற்பு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 27 செப்டம்பர், 2019-ல் புதுதில்லியில் கையெழுத்தானது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சாராம்சங்கள் மற்றும் முக்கிய நோக்கம்:

அ)   சுற்றுலாத்துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்;

ஆ)  சுற்றுலாத்  தொடர்பான தகவல் மற்றும் புள்ளிவிவரங்களை பரிமாறிக்கொள்ளுதல்;

இ)   ஓட்டல்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மற்றும் விமான நிறுவனங்கள் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த துறையினரிடையேயான ஒத்துழைப்புகளை ஊக்குவித்தல்;

ஈ)   மனிதவள மேம்பாட்டுத்துறையில் ஒத்துழைப்புக்கான திட்டங்களைப் பரிமாறிக்கொள்ளுதல்;

உ)   சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் முதலீடு;      

ஊ)  இருவழிச் சுற்றுலாவை மேம்படுத்த, ஏற்பாட்டாளர்கள் / ஊடகவியலாளர்கள் / விமர்சகர்கள் / பரஸ்பர பயணம் மேற்கொள்ளுதல்;

எ)   சுற்றுலா மேம்பாடு, சந்தை இலக்கு, வளர்ச்சி மற்றும் மேலாண்மை தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்;

ஏ)   இருநாடுகளில் நடைபெறும் சுற்றுலாக் கண்காட்சிகளில்,  பரஸ்பரம் பங்கேற்பு மற்றும்;

ஐ)   பாதுகாப்பான கவுரவமான நீடித்த சுற்றுலாவை ஊக்குவித்தல்;