பி.எம்.இந்தியா
சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா – உஸ்பெகிஸ்தான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தானிலிருந்து 01.10.2018 அன்று உஸ்பெகிஸ்தான் வருகையின்போது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பயன்கள்:
சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை விரிவுப்படுத்துவதற்கு இருநாடுகளும் நிறுவன ரீதியான செயல்முறையை உருவாக்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது உதவியாக இருக்கும். உஸ்பெகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இது உதவிசெய்யும். இதன் பயனாக பொருளாதார வளர்ச்சியோடு வேலைவாய்ப்பும் உருவாகும். விரிவான கட்டமைப்புகள் மற்றும் ஒத்துழைப்புப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட அனைவரும் பரஸ்பர பயன்களைப் பெறும் வகையில் நீண்டகால சுற்றுலா ஒத்துழைப்புக்கு சாதகமான நிலைமைகளை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கும். மேலும், இதற்குள் இடம்பெற்றுள்ள நோக்கங்களை அமலாக்கும் நடவடிக்கைகளின்போது சிறந்த நடைமுறைகளை இணைத்துக்கொள்வதற்கான வழிவகைகளை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கண்டறியும்.