Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுஷ்மா ஸ்வராஜுக்கு பிரதமர் மரியாதை


முன்னாள் வெளியுறவு அமைச்சர் மறைந்த திருமதி சுஷ்மா ஸ்வராஜ் பிறந்தநாளையொட்டி, பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டரில், மறைந்த தலைவர், “உயர்ந்த கண்ணியம், பண்பு நலம், பொது சேவையில் அசைக்க முடியாத ஈடுபாடு கொண்டவர். இந்தியாவின் விழுமியங்கள் மற்றும் பண்பாட்டில் உறுதியான பற்றுக்கொண்டிருந்த அவர், நமது நாட்டைப் பற்றி உயர்வான கனவுகளையும் கொண்டிருந்தார். அவர், அபூர்வமான சகாவாகவும், சிறந்த அமைச்சராகவும் திகழ்ந்தார்” என்று தெரிவித்துள்ளார்.

@narendramodi

சுஷ்மாஜியை நினைவுகூர்வோம்

உயர்ந்த கண்ணியம், பண்பு நலம், பொது சேவையில் அசைக்க முடியாத ஈடுபாடு கொண்டவர் அவர். இந்தியாவின் விழுமியங்கள் மற்றும் பண்பாட்டில் உறுதியான பற்றுக்கொண்டிருந்த அவர், நமது நாட்டைப் பற்றி உயர்வான கனவுகளை கொண்டிருந்தார். அவர், அபூர்வமான சகாவாகவும், சிறந்த அமைச்சராகவும் திகழ்ந்தார்

*******