Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சூரத் தொடர்ஓட்டத்தின் தொடக்கவிழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கியப்பகுதிகள்

பொதுமக்கள் ஏதேனும் சாதிக்க வேண்டுமென்று முடிவு செய்துவிட்டால் எந்த சக்தியாலும் அதை தடுக்க முடியாது இதுதான் மக்கள் சக்தி எந்தவொரு நாடும் தலைவர்களாலோ அரசுகளலோ உருவாவதில்லை மக்கள் சக்தியே ஒரு நாட்டை கட்டமைக்கிறது.

சாதி, மதம், ஊழலற்ற புதிய இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். அனைத்து குடிமகனும் அதிகாரம் பெற்ற இந்தியாவை நாம் உருவாக்க விரும்புகிறோம்.

சூரத் நகரம் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைந்துள்ளது. இது நல்லிணக்கம் மீது நம்பிக்கை வைத்துள்ள நகரமாகும். இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வர உள்ள யோகா தினத்திலும், அக்டோபரில் நடைபெற உள்ள ஒற்றுமைக்கான ஓட்டம் ஆகியவற்றில் சூரத் நகர குடிமக்கள் பங்கேற்க வேண்டுமென்று நான் வலியுறுத்துகிறேன்.

இது போன்ற தொடர் ஓட்டங்கள் பொது மக்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமென பொது மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். இது நல்ல ஆரோக்கியத்தையும் கூட்டு முயற்சிக்கான எண்ணத்தையும் வழங்குகிறது.

புதிய இந்தியாவைக் கட்டமைப்பது நம்முடைய நோக்கம், இந்தியச் சுதந்திரத்தின் போது உயிர் தியாகம் செய்த சிறந்த பெண்கள் மற்றும் ஆண்களுக்கு நாம் செய்யும் சிறந்த மரியாதை இதுவாகும்.