Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார கூட்டமைப்பின் கலந்துரையாடல் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கள்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார கூட்டமைப்பின் கலந்துரையாடல் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கள்


வானிலை குறித்து

தனது தொடக்க உரையை நினைவுகூர்ந்த பிரதமர் திரு.நரேந்திர மோடி, மிகவும் எளிதான வழியில், புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான தனது கனவையும், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட வேதங்கள் குறித்தும் குறிப்பிட்டார். இயற்கையைப் பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால், இயற்கையை அத்துமீறி பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று வேதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதை அவர் குறிப்பிட்டார்.

ஜெர்மனியில் மூன்று தினங்களுக்கு முன்பு தன்னிடம் இதே கேள்வி கேட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். அப்போது, தான் கூறும்போது, பாரிஸ் உடன்படிக்கை உள்ளதோ, இல்லையோ, அதைப் பற்றி கவலைப்படாமல், நமது குழந்தைகளுக்கு சுத்தமான காற்றுடன் கூடிய, சுத்தமான கிரகத்தை வழங்க வேண்டும் என்பதே இந்தியாவின் பாரம்பரியம். அதன் மூலமே, அவர்களால் (குழந்தைகளால்) சிறப்பாக வாழ முடியும் என்று குறிப்பிட்டதை தெரிவித்தார். இங்குள்ள பிரச்சினை ஒரு பக்கமா அல்லது வேறு பக்கமா என்பது இல்லை என்றும், ஆனால், இன்னும் பிறக்காத சந்ததியினரின் பக்கம் தான் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியா-ரஷ்யா உறவுகள் மற்றும் சீனாவுடன் உறவு குறித்து

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போன்று, உலகம் இரு துருவங்களாக நீடிக்காது என்று பிரதமர் தெரிவித்தார். உலக நல்லுறவு குறித்து நாம் பேசும்போது, ஒட்டுமொத்த உலகமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது மற்றும் ஒன்றுடன் ஒன்று சார்ந்து இருப்பதை நாம் கட்டாயம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். ஒவ்வொரு நாடும், மற்ற நாடுகளுடன் சில வகையில் தொடர்பில் உள்ளன. அதில், வேறுபாடுகளும் இருக்கலாம், ஒத்துழைப்பும் இருக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

இந்தியா-ரஷ்யா இடையேயான உறவு வலுவாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்த நல்லுறவைப் புரிந்துகொள்ளவும், நாம் எவ்வாறு இதனை முன்னெடுத்துச் செல்கிறோம் என்பதை அறிந்துகொள்ளவும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அறிவிக்கையை ஒட்டுமொத்த உலகமும் படிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

சீனாவுடன் உறவு குறித்து விளக்கம் அளித்த பிரதமர், எல்லைப் பிரச்சினை இருந்தபோதும், கடந்த 40 ஆண்டுகளாக எல்லைப் பகுதியில் ஒரு முறை கூட அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில்லை என்று தெரிவித்தார். பொருளாதார உறவு விரிவடைந்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். எந்த இரண்டு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவையும், மூன்றாவது நாட்டின் அடிப்படையில் பார்க்கக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.

பிரிக்ஸ் அமைப்பில் அனைத்து உறுப்பு நாடுகளும் ஒன்றாக பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த சூழ்நிலையில், பிரிக்ஸ் வங்கி ஒரு உதாரணம் என்று அவர் குறிப்பிட்டார். அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் (Sabka Saath, Sabka Vikas) என்ற வார்த்தையில் இந்தியாவுக்கு நம்பிக்கை இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். வளர்ச்சிப் பாதையில் ஒவ்வொருவரையும் இணைத்துச் செல்லவே தாங்கள் விரும்புவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

தீவிரவாதம் குறித்து

தீவிரவாதம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து 1980 மற்றும் 1990-களில் உலகம் முழுமையாக அறிந்திருக்கவில்லை என்று பிரதமர் தெரிவித்தார். 40 ஆண்டுகளாக எல்லைதாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகே, தீவிரவாதத்தின் உண்மையான அச்சுறுத்தலை உலகம் அறிந்துகொண்டதாகவும், உண்மையில் தீவிரவாதத்துக்கு எல்லையே இல்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.

தீவிரவாதத்திலிருந்து உலகைப் பாதுகாக்க அனைத்து மனிதநேய சக்திகளும் ஒன்றிய வேண்டியது தற்போதைய அவசியத் தேவை என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

கடந்த 40 ஆண்டுகளாக, தீவிரவாதத்தின் வரையறை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பால் உடன்பாட்டுக்கு வர முடியாததற்காக பிரதமர் வருத்தம் தெரிவித்தார். இந்த விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையில் எழுப்புவதாக அதிபர் புதின் நேற்று கூறியதற்கு பிரதமர் வரவேற்பு தெரிவித்தார்.

தீவிரவாதிகளால் ஆயுதங்களை உற்பத்தி செய்யவோ, ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கவோ முடியாது என்று குறிப்பிட்ட பிரதமர், இதனை தீவிரவாதிகள் சில நாடுகளிலிருந்தே பெறுவதாக தெளிவுபடுத்தினார். இந்த விவகாரம், மனிதநேயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஒட்டுமொத்த உலகமும் உணர வேண்டும். அப்போதுதான், தீவிரவாதத்திலிருந்து நம்மால் மீண்டுவர முடியும் என்று பிரதமர் தெரிவித்தார்.

உலக வர்த்தகம் குறித்து

திறந்த பொருளாதாரத்தின் மீதே இந்தியாவுக்கு நம்பிக்கை இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். உலக வர்த்தகத்தில், அனைத்து நாடுகளும் மற்ற நாடுகளுக்காக சில மாற்றங்களைச் செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் உதவிக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்தார்.