Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜப்பானின் கோபே நகரில் ஜூன் 27, 2019 அன்று இந்திய சமூகத்தினரின் நிகழ்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்


இந்திய நண்பர்களே, ஜப்பான் மக்களே மற்றும் இங்கே பெருமளவில் குழுமியிருக்கும் இந்தியாவின் நண்பர்களேஉங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

 

            நான் கோபேவுக்கு ஏன் அழைத்துவரப்பட்டேன் என்று ஆச்சரியப்படுகிறேன். இங்கே நான் பலமுறை வந்திருக்கிறேன்; அங்கே பல முகங்கள் உள்ளன. அங்கே என்னை எதற்காக அழைத்துச் செல்கிறீர்கள் எனக் கேட்டேன்யார் வருவார்? ஆனால் உண்மையில் உங்களின் மேம்பட்ட ஊக்கத்தைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். உங்களின் அன்புக்கு நான் உண்மையில் நன்றியுடையவனாக இருப்பேன்.

     7 மாதங்களுக்கு பிறகு ஜப்பான் வரும் வாய்ப்பைப் பெற்றதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். மேலும், முன்பு நான் இங்கு வந்த போது, இங்கே குடியேறியுள்ள இந்தியர்களுடனும், ஜப்பான் நண்பர்களுடனும் கலந்துரையாடும் வாய்ப்பைப் பெற்றேன்கடந்த ஆண்டு நான் இங்கு வந்தபோது, உண்மையில் தற்செயலாக ஒரு சம்பவம் நிகழ்ந்ததுஎனது நண்பர் திரு.ஷின்சோ அபேவின் தேர்தல் முடிவுகள் வெளியானது. மீண்டும் அவர் மீது நம்பிக்கை வைத்து அவரைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். இன்று நான் உங்களிடையே இருக்கும் போது, உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, பெரிய அளவிலான அன்பையும், நம்பிக்கையையும் இதற்கு முன் இல்லாத அளவில் தங்களின் முதன்மை சேவகனுக்கு வெளிப்படுத்தியுள்ளது.

     இந்தத் தீர்ப்புக்கு உங்களில் பலர் பங்களிப்பு செய்துள்ளீர்கள் என்பதை நான் அறிவேன்உங்களில் சிலர் இந்தியாவுக்கு வந்து நேரடியாக பணியாற்றி உள்ளீர்கள். 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே நீங்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறீர்கள். சிலர் சமூக ஊடகம், ட்விட்டர், முகநூல், நரேந்திர மோடி ஆஃப் போன்றவற்றில் அனைத்துத் தகவல்களையும் பரிமாறி இருக்கிறீர்கள்.

      மேலும் பலர் தங்களது பழைய நண்பர்களுக்கு கடிதங்களை எழுதியிருக்கிறீர்கள், அவர்களது கிராமங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்துள்ளீர்கள். ஒரு வழியாக ஜனநாயக திருவிழாவை நீங்கள் வலுப்படுத்தியிருக்கிறீர்கள். அதனை உயிரோட்டமாக்கியிருக்கிறீர்கள். அதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர்களே,

     130 கோடி இந்தியர்கள், வலுவான அரசை உருவாக்கியுள்ளனர். இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். முப்பது ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு அரசு பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சிக்கு வந்துள்ளது. இந்தியாவைப் போன்ற மிகப் பரந்த நாட்டில் இது போன்ற ஒரு சாதனை சாதாரணமான ஒரு நிகழ்வு அல்ல. எனினும், 1984-ல் ஒரு கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தது. ஆனால், அந்தக் காலக்கட்டத்தில் உள்ள நிலைமைகள் உங்களுக்குத் தெரியும். அதற்கான காரணங்களும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். மக்கள் ஏன் வாக்களிக்கச் சென்றார்கள் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். நான் மீண்டும் அதனை சொல்லத் தேவையில்லை. ஆனால் 1971-க்கு பிறகு முதல் முறையாக ஒரு அரசுக்கு மீண்டும் பெரும்பான்மை ஆட்சி உரிமையை நாடு வழங்கியுள்ளது.

நண்பர்களே,

இந்தியாவின் மகத்தான தீர்ப்பைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா இல்லையா? இது யாருடைய வெற்றி? இதனை உங்களிடமிருந்து நான் அறியும்போது அது எனக்கு அபரிமிதமான மகிழ்ச்சியைத் தருகிறது. இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி. இந்திய ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி. ஜப்பானிலிருந்தும் இந்தியாவின் ஆர்வத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். உங்களது எதிர்பார்ப்புகளுக்கும், இந்தியர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை, எனவே உங்களது பதிலை நான் கேட்க விரும்புகிறேன்நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம் என்ற அபரிமிதமான திருப்தி இதன் மூலம் கிடைக்கிறது.

     கிரிக்கெட் விளையாட்டை மைதானத்தில் காணும்போது ஒரு வீரர் எப்படி வெளியேறினார் என்பதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்கிறோம். ஆனால், இந்த விளையாட்டை வீட்டிலிருந்து கொண்டு நேரடியாக தொலைக்காட்சியில் பார்ப்பவர்களும் மற்றும் விளையாட்டு அரங்குக்கு தூரத்தில் இருந்து பார்ப்பவர்களும், கிரிக்கெட் வீர்ர் வெளியேறிய காரணத்தை உடனடியாக அறிய முற்படுவார்கள். அலைநீளத்திற்கான காரணமாகவும் இருக்கலாம். அதே போன்று இந்தியாவை நீங்கள் தூரத்தில் இருந்துகொண்டு கண்காணிக்கிறீர்கள். உண்மையைக் கண்டறியவதற்கு உங்களுக்கு பெரிய அளவில் தகுதி உள்ளது. எனவே, உங்களது பதில் – “உண்மைக்குக் கிடைத்த வெற்றி, ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி மற்றும் இந்தியர்களுக்குக் கிடைத்த வெற்றிநான் இதனை  அதிக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறேன். எனக்கு இது தூண்டுதலாக அமைகிறது, புதிய வலுவைத் தருகிறது. அதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

     வெற்றிக்கு பின்புலத்தில் உள்ள காரணங்களில் ஒன்று மக்களின்  எதிர்பார்ப்புகள் மற்றும் ஆர்வங்களில் உள்ள நம்பிக்கை ஜனநாயக மாண்புகளை பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்புகள்,  40 முதல் 45  டிகிரி செல்சியஸ்  கொளுத்தும் வெயிலில் 61 கோடி வாக்காளர்கள், தங்கள் வீடுகளுக்கும் வெகு தூரத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்குச் சென்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்கின்றனர். இந்தியாவின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சீனா நீங்கலாக எந்த ஒரு நாட்டைக் காட்டிலும் அதிகமானதாகும். பத்து லட்சம் வாக்குச் சாவடிகள், நாற்பது லட்சத்துக்கும் அதிகமான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 600க்கும் அதிகமான அரசியல் கட்சிகள், எட்டாயிரத்துக்கும் அதிகமான வேட்பாளர்களுடன் தேர்தலில் தீவிரமாக களம் இறங்கிய இந்தியாமிகப் பெரிய ஜனநாயக நாடாகும்இதுதான் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாகும். மனித வரலாற்றில் இது போன்ற பெரிய அளவிலான ஜனநாயகத் தேர்தல் இருந்ததில்லை. இதனைக் கண்டு ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும்.

     இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் அல்லது எதிர்காலத்தில் புதிய சாதனையை உருவாக்கும்  பொறுப்பு இந்திய மக்களின் கரங்களில் உள்ளது. ஒருவழியில் இந்தியாவுக்கு காப்புரிமை உள்ளதுஇந்தியர்களைப் போன்று இந்தியாவின் மீது நல்லெண்ணம் கொண்டவர்களும் இதனைக் கண்டு பெருமை கொள்ள வேண்டும். உலகம் முழுமைக்கும் இது உந்துதலை ஏற்படுத்த வேண்டும். இந்திய ஜனநாயகத்தின் மீது சமானிய மக்களின் நம்பிக்கைக்கு நிகர் ஏதும் இல்லை என்பதை இது மீண்டும் நிரூபித்துள்ளதுநமது ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் உலகிற்கு முன்னோடியாக  அமைந்திருக்கின்றன.

நண்பர்களே,

உலகின் 21-வது நூற்றாண்டிற்கு புதிய நம்பிக்கையை வலுவான இந்தியா வழங்கும். இந்தத் தேர்தல் மற்றும் இதன் விளைவு இந்தியாவுக்கு மட்டும் கட்டுப்பட்டதல்ல. உலகம் முழுவதும் உள்ள  ஜனநாயக உள்ளம் படைத்தவர்களுக்கு இது தூண்டுதலாக அமையும். புதிய இந்தியாவின் எதிர்பார்ப்புகள் மற்றும் ஆர்வங்களை சந்திக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தீர்ப்பு  உலக நாடுகளுடனான  நமது உறவுக்கு புத்துயிர் அளிக்கும். உலக நாடுகள் அனைத்தும் தாமகவே இந்தியா மீது நம்பிக்கை கொண்டுள்ளன. இந்தியாவுடன் அவர்கள் பேசும்போது, அவர்கள் நினைப்பார்கள் ஆம், இந்த அரசு மக்களின் தீர்ப்பைப் பெற்றுள்ளது; பெரும்பான்மை பலத்துடன் மக்கள் இந்த அரசை தேர்ந்தெடுத்துள்ளனர்எனவே, எதைப் பற்றி முடிவு செய்தாலும் அவர்கள் அதனை முன்னெடுத்துச் செல்வார்கள்.

சர்வதேச உறவுகளுக்கு, ஒரு அரசுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பது அவசியமானதாகும்எனினும், பெரும்பான்மை ஆதரவுக்கான மக்களின் தீர்ப்பு அரசை மட்டும் வலுப்படுத்துவது அல்ல, மேலும் நம்பிக்கையையும், உண்மையையும் அது மேம்படுத்துகிறது.

சப்கா விஷ்வாஸ்ன் அமிர்தத்தை சப்கா சாத் சாப்கா விகாஸ்”-க்கு மக்கள் அளித்துள்ளனர்இந்த மந்திரத்துடன் நாங்கள் நகர்ந்து கொண்டிருக்கிறோம். இந்தியாவின் மீதான உலக நாடுகளின் நம்பிக்கையை இது வலுப்படுத்தும். அதே உணர்வை நானும் பெற்றிருக்கிறேன் என்பதை உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

உலக நாடுகளுடனான இந்தியாவின் உறவில் ஜப்பான் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளதுஇந்த உறவு பழமை வாய்ந்தது. இந்த உறவின் சாரம், உடைமைகள், நல்லெண்ணம் ஒவ்வொருவரின் கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தின் மீதான மரியாதை ஆகியவற்றைக் கொண்ட உணர்வாகும். இது போன்ற உறவுகள் மகாத்மா காந்தியுடன் தொடர்புகொண்டதாகும். தற்செயலாக இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளதுநமது குழந்தைப் பருவத்திலிருந்து காந்திஜி கற்றுத் தந்த பாடங்களைக் கேட்டும் அறிந்து வருகிறோம் – “பூராமட் தேஹோ, பூராமட் சுனோ, பூராமட் கஹோஅதாவது தீயதைப் பார்க்காதே, தீயதைக் கேட்காதே, தீயதைப் பேசாதே. இந்தியாவின் ஒவ்வொரு குழந்தையும் இந்த தத்துவத்தை மிகவும் நன்றாக உணரும். என்றாலும், பாபு தேர்ந்தெடுத்த இந்தத் குரங்குகள், 17-வது நூற்றாண்டில் ஜப்பானில் உருவாக்கப்பட்டவை என்பதை சிலரே அறிவர். மிஸாரோ, கிக்காசாரோ மற்றும் ஐவாஸாரோ ஆகியவை ஜப்பானின் பாரம்பரியமாகும். அவற்றின் மீது புனித பாபு ஒரு அடையாளத்தைத் தேர்ந்தெடுத்து சமூகத் தகவலை அதன் மூலம் பரப்பியிருக்கிறார்.

நண்பர்களே,

     நமது வழிகாட்டுதல், நடத்தை மற்றும் சடங்குகள் ஆகியவற்றுக்கு முன்னதாகவே ஜப்பானில் புத்தமதம் தோன்றியுள்ளது. அடுத்த ஜியோன் திருவிழா அடுத்த மாதம் கியோட்டோ நகரில் நடைபெற உள்ளதுஜியோன் திருவிழாவில் பயன்படுத்தப்படும் தேர், இந்தியாவின் பட்டு நூல் இழைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாரம்பரியம் புதிது அல்ல; நீண்ட நெடுங்காலமாகவே இந்தப் பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

     அதே போன்று, செல்வத்திற்கான 7 கடவுள்களில் 4 – சிச்சிஃபுக்குஜின், நேரடியாக இந்தியாவுடன் தொடர்பு கொண்டுள்ளது. தாய் சரஸ்வதி ஜப்பானில் பென்சைட்டனாகவும், தாய் லட்சுமி கிஜ்ஜிசோட்டனாகவும், குபேரக் கடவுள் பிஷாமோன் ஆகவும், மகாகாளி டைக்கோகுட்டனாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்

 

நண்பர்களே

 

துணியில் அச்சிடப்படும் ஷிபோரி கலை, இந்தியா ஜப்பான் இடையேயான உறவுகளுக்கு நீண்டகால இணைப்பாக விளங்குகிறதுகுஜராத்தின் கட்ச் மற்றும் ஜாம்நகர், கலையான பந்தானி கலைக்குள் கைவினை கலைஞர்கள் பன்னெடுங்காலமாக வண்ணப்படிம தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள்எனவே ஜப்பானில்  வேலை செய்வோர் கட்ச் மற்றும் ஜாம்நகர்  கைவினைஞர்களைக் காணும்போது அவர்களை ஜப்பான்காரர்களாக உணர்கிறார்கள். கட்ச் மற்றும் ஜாம்நகரில் வேலை செய்வோர், ஜப்பான் தொழிலாளர்களைக் காணும்போது, அவர்களை குஜராத்காரர்களாக   உணர்கிறார்கள். இவற்றுக்கிடையே ஏராளமான ஒற்றுமைகள் இருக்கின்றன. மேலும், நமது மொழிகளிலும் ஓரளவு ஒற்றுமை உள்ளது. தியான் அல்லது தியானம் என இந்தியாவில் அறியப்படுவது ஜப்பானில் ஜென் என கூறப்படுகிறது. இந்தியாவில் சேவா அல்லது சேவை என்பது ஜப்பானிலும் சேவா என்று அறியப்படுகிறது. सेवा परमो धर्म:  அதாவது தன்னலமற்ற சேவை இந்தியாவில் முதன்மைக் கடமையாகக் கருதப்படுகிறது. ஜப்பான் சமூகம் இதையே நடைமுறையாகக் காட்டுகிறது.

நண்பர்களே,

     சுவாமி விவேகானந்தர், குருதேவ் ரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். நீதியரசர் ராதா வினோத் பால் உள்ளிட்ட பல இந்தியர்கள் ஜப்பானுடனான உறவை  வலுப்படுத்தியிருக்கிறார்கள். ஜப்பானில் இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் அன்பும், மதிப்பும் இருக்கிறது.

     மேலும், இரண்டாம் உலகப்போர் முடிவடைந்தபின், இந்தியா ஜப்பான் இடையேயான உறவு வலுப்படத் தொடங்கியது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால் , பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாஜ் அவர்களும், பிரதமர் யோஷிரோ மோரி அவர்களும் நமது உறவுக்கு உலகளாவிய வடிவத்தை  அளித்தனர்.

     2014-ல் நான் பிரதமரான பிறகு, இந்த நட்புறவை எனது நண்பர் பிரதமர் ஷின்சோ அபேயுடன் வலுப்படுத்துகின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். தலைநகரங்கள், தூதரகங்கள் என்ற வழக்கமான நடைமுறைகளிலிருந்து  நமது ராஜீய உறவுகளை விடுபட்டு,  நேரடியாக மக்களிடம் கொண்டு சென்றிருக்கிறோம்டோக்கியோ தவிர கியோட்டோ, ஒசாக்கா, கோபே, யமானாஷி ஆகியவற்றுக்கும் பிரதமர் அபேயுடன் நான் பயணம் செய்திருக்கிறேன். கோபே நகருக்குப் நான் பலமுறை பயணம் செய்துள்ளேன். கோபே நகருக்குப் பயணம் செய்தது, நான்கு முறையா, ஐந்து முறையா அல்லது மூன்று முறையா என்ற குழப்பம் எனக்கு இருக்கிறதுநான் பிரதமராக இல்லாதபோதும் இங்கே வந்திருக்கிறேன். கடந்த ஆண்டு யமானாஷியில் உள்ள  தமது  இல்லத்திற்குப் பிரதமர் என்னை அழைத்திருந்தார். அவரின் சிறப்பான உபசரிப்பு ஒவ்வொரு இந்தியருக்கும் மனநெகிழ்ச்சியைத் தந்தது. அதுமட்டுமின்றி அரசு சார்ந்த உறவுகளில் இத்தகைய தனிப்பட்ட உணர்வைக் காண்பது அரிதாகும்.

     தில்லி தவிர அகமதாபாத், வாரணாசி, ஆகிய நகரங்களுக்கு எனது நண்பர் பிரதமர் அபேயை அழைத்துச் செல்லும் நல்வாய்ப்பை  நான் பெற்றிருந்தேன். உலகின் தொன்மையான கலாச்சார மற்றும் ஆன்மீக நகரங்களில் ஒன்றான காசியாகிய எனது வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற கங்கை ஆரத்தியில் பிரதமர் அபே பங்கேற்றார்.   இந்த நிகழ்வில் அவர் பங்கேற்றது மட்டுமின்றி  அவரது ஆன்மீக அனுபவத்தை  தமது உரைகளில் தவறாமல் குறிப்பிட்டு வந்தார். இப்போதும் அதனை அவர் குறிப்பிடுகிறார்இந்தக் காட்சிகள் ஒவ்வொரு இந்தியரின் மனங்களிலும் பதிந்துள்ளன.

நண்பர்களே,

கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் முக்கியப் பங்கு வகித்துள்ளது.  21-ஆம் நூற்றாண்டின் புதிய இந்தியாவில் இந்தப் பங்கு மேலும் வலுவடையும்.  1958-ல் ஜப்பான்  முதன் முறையாக இந்தியாவிற்கு யென் செலாவணியில் கடன் வழங்க ஒப்புதல் அளித்தது. அப்போதிருந்து ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன. மேலும்சிறந்த தரத்திற்குத்  தனி அடையாளத்தை அவை உருவாக்கியுள்ளன.

கார் தயாரிப்புக்காக இணைந்து செயல்பட்ட  காலம் ஒன்று இருந்தது. இன்று புல்லட் ரயில்கள் தயாரிப்புக்காக  நாம் இணைந்து செயல்படுகிறோம். நாட்டின் கிழக்கே இருந்து மேற்கே வரையும். வடக்கே இருந்து தெற்கே வரையும் ஜப்பானின் திட்டப்பணிகளும், முதலீடுகளும் இருக்கின்றன. அதே போல் ஜப்பானின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்தியாவின் மனித சக்தியும், திறனும் பங்களிப்பு செய்கின்றன.

நண்பர்களே,

     புதிய இந்தியாவைக் கட்டமைப்பதில் நமது ஒத்துழைப்பு மிகவும் பரவலானதாக இருக்கிறது. வரும் ஐந்தாண்டுகளில் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியாவை உருவாக்க  வேண்டும் என்ற இலக்கோடு நாங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். சமூக வளர்ச்சித்துறை எங்களின் முன்னுரிமையாகும். இது தவிர அடிப்படைக் கட்டமைப்பில் மாபெரும் முதலீட்டுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம்.

     குறிப்பாக டிஜிட்டல் கட்டமைப்பு, இந்தியாவை முன்னணியில் வைக்கிறது. இது ஒட்டுமொத்த உலகத்தின் முதலீட்டை ஈர்ப்பதாக உள்ளதுடிஜிட்டல் அறிவு இந்தியாவில் இன்று வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் சாதனை அளவை  எட்டியுள்ளன. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமைத் தொழில்களுக்கு பிரமாண்டமான கட்டமைப்பு வசதிகள்தயாராகின்றன; ஒரு புதிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  வரும் ஐந்தாண்டுகளில்  50,000 புதுமைத் தொழில்களைக் கொண்டதாக இந்தியாவை மாற்றும்  இலக்கை நாங்கள் கொண்டிருக்கிறோம்.

நண்பர்களே,

     ‘வானமே எல்லை’, என்று சொல்வது ஒரு காலத்தில் உண்மையாக இருந்ததுஆனால், விண்வெளி ஆய்வில் இந்தியா அந்த எல்லையைக் கடந்துவருகிறது. இந்தியாவின் 130 கோடி மக்களின் வாழ்க்கையை எளிதாக்கவும், பாதுகாப்பானதாக்கவும்விண்வெளித் தொழில்நுட்பத்தைக் குறைந்த செலவில், நிறைவாகப் பயன்படுத்துவது எங்களின் இலக்காக உள்ளதுஇதில் நாங்கள்  வெற்றிகரமாக முன்னேறி வருகிறோம் என்பதில்  மகிழ்ச்சியடைகிறேன்.

     அண்மையில், ஃபானி புயல் ஏற்படுத்திய பல்வேறு சவால்களை சந்தித்து, இந்தியா சேதத்தைக் குறைத்துள்ளது. இதற்கு அரசு எந்திரங்களையும் மனித ஆற்றலையும் விண்வெளித் தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைத்து மேற்கொள்ளப்பட்ட முயற்சியை உலகமே பாராட்டியது. இந்தியா அதனை செய்து காட்டியது! ஒரு பக்கம் தேசம் தேர்தலில் பரபரப்பாக இருந்தது. மறுபக்கம் இந்த சாவல்மிக்க பணி, வியப்பூட்டும் வகையில் நிறைவடைந்தது. இந்தப் பணியை உலகம் பாராட்டியது. இது எங்களுக்கு ஊக்கமளிக்கும் அம்சமாகும்இதன் காரணமாக ஒரு சில மாதங்களில் சந்திரயான் -2 விண்கலத்தை செலுத்தி எங்களின் நிலவுப் பயணத்தில் முன்னேறவிருக்கிறோம்.  முதன் முறையாக மனிதருடன் செல்லும் ககன்யான் விண்கலத்தை 2022 வாக்கில் செலுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். நிலவில் மூவண்ணக் கொடியைப் பறக்கவிடுவதற்கு இந்தியர் ஒருவரை அனுப்பும் கனவோடு நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

     விண்வெளியில் ஆய்வு நிலையம் அமைப்பதை  உறுதி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி நாங்கள். ஆய்வு செய்து வருகிறோம்இந்தப் பணிகள் எல்லாம், மன எழுச்சிகளோடு வாழும் இந்திய மக்களுக்காக இன்று செயல்படுத்தப்படுகின்றன. புதிய நடுத்தர வர்க்கம் பலவகை விருப்பங்களோடும், நம்பிக்கைகளோடும் இருக்கிறது. விரைவான விளைவுகளுக்காக அது காத்திருக்கிறது. அவர்களின் முன்னேற்றத்திற்குப்  புதிய வழிகளை நாங்கள் ஏற்படுத்தி வருகிறோம்.

நண்பர்களே,

     பல்வேறு வாய்ப்புகளின் வாசலாக ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவைக் காணும் நேரத்தில், ஜப்பானுடனான எங்களின் உறவும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. ஜப்பானின் கைசன்  தத்துவமும் இந்திய ஜப்பான் உறவுகளின் முன்னேற்றத்திற்குப் பயன்படுகிறது. நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது எனது ஊழியர் ஒருவருக்கு தொடர்ச்சியாக கைசன் தத்துவத்தில் பயிற்சி அளித்தேன்ஏனெனில் கைசன் நடைமுறை என்பது இடைநில்லா நடைமுறையாகும். நமது உறவுகள் மேலும், வலுவாக வளர்வது தொடரும்.

நண்பர்களே,

பிரதமர் என்ற முறையில் ஜப்பானுக்கு நான் பயணம் செய்வது நான்காவது முறையாகும். ஒவ்வொரு பயணத்தின் போதும், ஜப்பானில் இந்தியாவுக்கான நெருக்கத்தை உணர்கிறேன். நாகரீகத்திலும், வாழ்க்கை மாண்புகளிலும் பெருமிதம் கொள்வது, பாரம்பரியங்களின் பகுதியாகத் திறனையும், தொழில்நுட்பத்தையும் உருவாக்குவது, தேசத்தைக் கட்டமைப்பது போன்ற ஜப்பானின் பல்வேறு அம்சங்களை நான் நேரடி அனுபவமாகப் பெற்றிருக்கிறேன். இந்த அனுபவத்தைப் பெற்ற நபர் நான் மட்டுமே அல்ல.

ஒரு நூற்றாண்டுக்கு முன் சுவாமி விவேகானந்தர் அவர்கள் ஜப்பானில் பயணம் செய்தபோது, அதன் நாகரீகம், மக்களின் அர்ப்பணிப்புபணிநெறிமுறை ஆகியவற்றால் கவரப்பட்டார். அதன் பிறகு ஒவ்வொரு இந்தியரும், ஜப்பானுக்குப் பயணம் செய்ய வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். ஆனால் அப்போதிருந்த மக்கள் தொகை மிகவும் குறைவாகும். இப்போது 130 கோடி மக்கள் இருப்பதால் இது சாத்தியமாக இருக்காது…… நானும் கூட இதனைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் இங்குள்ள நீங்கள் எல்லோரும் 130 கோடி மக்களின் பிரதிநிதிகள். நீங்கள் ஜப்பானின் பணிக்கலாச்சாரத்தையும், பணி நெறிமுறைகளையும்பாரம்பரியத்தையும் தொழில்நுட்பத்தையும் இந்தியாவுக்குத் தொடர்ச்சியாகக் கொண்டுவர வேண்டும்இதே போல்  இந்தியாவில் உள்ளவற்றை  இங்குள்ள மக்களுக்குக் கூறவேண்டும். இந்த இணைப்பு  நமக்குப் புதிய பலத்தை அளிக்கும். புதிய நடைமுறைக்கான மாற்றத்திற்கு உதவுவதோடு உறவுகளையும் உயிர்ப்பாக வைத்திருக்கும். இவை எல்லாம் சடங்குகள் அல்ல, உயிர்த்துடிப்பான நடைமுறைகள். உயிர்த்துடிப்பான நடைமுறை மக்களின் ஒருமைப்பாட்டோடு உருவாகிறது.

நிறைவாக, எனது உரையை முடிப்பதற்கு முன் ஜப்பான் மக்களுக்கும், இந்தியர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும்ஜப்பானிய சகோதர சகோதரிகளுக்கு புதிய ரைவா சகாப்த வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சகாப்தத்தில் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அழகான இணக்கத்திற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். ஜப்பானில், குறிப்பாக கோபேயில் நான் இருக்கும் போதெல்லாம் நீங்கள் அளிக்கும் நெஞ்சார்ந்த வரவேற்புக்கும், விருந்தோம்பலுக்கும் எனது இதயபூர்வமான நன்றியைத்  தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜூன் 21, அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவதையும், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும், யோகாவை பரவச் செய்து பிரபலப்படுத்தும் தனிநபர்களையும், அமைப்புகளையும் இந்திய அரசு கவுரவித்து பரிசுகள் வழங்குவதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்இந்த முறை ஜப்பானில் யோகாவுக்காகப் பணியாற்றும் அமைப்பை  கவுரவிப்பது என்று இந்திய அரசு முடிவு செய்த தகவலையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். இது மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும். அதாவது எல்லா வழிகளிலும் நாம் இணைந்திருக்கிறோம். இந்தப் பெருமிதத்தோடு உங்களோடு இருந்து உங்களின் வாழ்த்துக்களைப் பெறுவதற்கு வாய்ப்பளித்ததற்காக மீண்டும் ஒரு முறை  எனது  நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி !