பி.எம்.இந்தியா
ஜப்பானியர்கள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜப்பானிய பிரதமர் திரு. ஷின்சோ அபேக்கு கடிதம் எழுதியுள்ளார்.
“ஜப்பானியர்கள் கெஞ்ஜி கோடோ, ஹருணா யுகாவா ஆகியோரை ஐ.எஸ். அமைப்பினர்கள் காட்டுமிராண்டித்தனமாக கொலைசெய்த செய்தி எனக்கும் இந்திய மக்களும் அதிர்ச்சியையும் மிகுந்த வருத்தத்தையும் அளித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஜப்பான் மக்களுக்கும் எங்களது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் எப்போதும் இருக்கும்.” என்று பிரதமர் எழுதியுள்ளார்.
“தீவிரவாதிகளின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயல்களை வன்மையாக கண்டிப்பதில் ஜப்பானுடன் இந்தியா என்றும் துணை நிற்கும். இந்தக் கொலைகள் தீவிரவாதத்தின் மனிதத்தன்மையற்ற நிலையை உலகத்திற்கு அப்பட்டமாக நினைவூட்டியுள்ளது. உலக சமூகத்திற்கு இது ஒரு பெரும் சவாலாக உருவாகியுள்ளது. அப்பாவிகளின் உயிரை அழித்த இந்த சோக சம்பவத்திற்கு பிறகு தீவரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த சர்வதேச ஒத்துழைப்புகள் மேலும் வலுவடைய உறுதிமொழி ஏற்போம்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
“இந்த சோகமான நேரத்தில் உங்களது தலைமை பலத்தினாலும், ஞானத்தினாலும் உங்கள் நாட்டை வழிநடத்த எனது தனிப்பட்ட வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துகொள்கிறேன்’ என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.