Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீது மறைவு – பிரதமர் இரங்கல்


ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீது மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“முப்தி அவர்களின் மறைவு நாட்டிலும் ஜம்மு காஷ்மீரிலும் பெரும் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அவர் தனது ஆளுமைத்திறன் மூலம் பலரின் வாழ்க்கையை மெருகேற்றியுள்ளார். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். முப்தி அவர்களின் செயல்பாடுகள் என்றும் நம் மனதில் நிற்கும். தனது அரசியல் வாழ்க்கையில் பல அரசியல் தலைவர்களுக்கு முப்தி அவர்கள் முன்னோடியாக திகழ்ந்துள்ளார். தனது ஆளுமை திறன் மூலம் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சியை உறுதிசெய்தார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

***