Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜம்மு, காஷ்மீர், லே, லடாக் முழுவதும் நடைபெற்ற பிடிசி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


ஜம்மு, காஷ்மீர், லே, லடாக் முழுவதும் நடைபெற்ற பிடிசி தேர்தலில் வெற்றி பெற்ற அவைருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜம்மு, காஷ்மீர், லே, லடாக்கில் பிடிசி தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடத்தப்பட்டது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ளச் செய்யும் செய்தி!
1947-க்குப் பின் முதன்முறையாக ஜம்மு, காஷ்மீர், லே, லடாக்கில் வட்டார வளர்ச்சிக் கவுன்சில் (பிடிசி) தேர்தல் அக்டோபர் 24 அன்று நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக 98% வாக்குகள் பதிவாகின. 310 வட்டாரங்களில் 1,080-க்கும் அதிகமான வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

ஜம்மு, காஷ்மீர், லே, லடாக்கில் பிடிசி தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடத்தப்பட்டது என்பதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். வன்முறை என்பதே இல்லை.

ஜனநாயகம் மற்றும் அடித்தள நிலையிலான நிர்வாகத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றின் மீதான மக்களின் ஊசலாட்டம் இல்லாத நம்பிக்கையை இது காட்டுகிறது.

ஜம்மு, காஷ்மீர், லே, லடாக் முழுவதும் நடைபெற்ற பிடிசி தேர்தலில் வெற்றி பெற்ற அவைரையும் நான் வாழ்த்துகிறேன்.

இந்தப் பகுதிகள் முழுவதும் புதிய மற்றும் இளம் தலைமைத்துவம் உருவாகியிருப்பதை இது குறிக்கிறது. வரும் காலங்களில் தேசத்தின் வளர்ச்சிக்கு இது மகத்தான பங்களிப்பைச் செய்யும்.

இந்த ஆண்டு ஆகஸ்டில் மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுக்காக இந்திய நாடாளுமன்றம் பெருமிதம் கொள்கிறது. இதன்மூலம் ஜம்மு கஷ்மீர் மக்கள் அபரிமிதமான ஆர்வத்தோடு தங்களின் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்த முடிந்துள்ளது. அதுவும் வன்முறையோ, இடையூறோ இல்லாமல் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக 98% வாக்குகள் பதிவானதைக் காணமுடிகிறது.

ஜம்மு கஷ்மீரின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களின் விதியை ஒழுங்குபடுத்தும் இளைய, செயலூக்கம் உள்ள பிரதிநிதிகளை உருவாக்கும் வகையில் முடிவெடுத்த இந்திய நாடாளுமன்றத்திற்கு நன்றி.

ஜம்மு கஷ்மீர் குறித்து வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவெடுத்ததற்காக அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை நான் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.

******