பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் புதுதில்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஏற்றுமதி மேம்பாடு ஆகியவற்றுக்கான சிறப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிலில் அடுத்த 3 ஆண்டில் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்க அரசு அறிவித்த சீர்திருத்த திட்டத்தின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் தொழிலாளர் நலனுக்கு ஏற்ற பல நடவடிக்கைகள் அடங்கியுள்ளன. இத் திட்டம் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மேம்படுத்தி பொருளாதாரத்தை உயர்த்தி ஏற்றுமதிகளை ஊக்குவிக்கும். இத் திட்ட நடவடிக்கைகளால் ஏற்றுமதி மொத்தமாக 3000 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு உயரும். அடுத்த 3 ஆண்டுகளில் முதலீடுகள் ரூ 74,000 கோடி அளவுக்கு ஏற்படும்.
ஆயத்த ஆடைத் தொழில் 70 சதவீத பெண் தொழிலாளர்களை கொண்டிருப்பது என்பதால் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளில் பெரும் பங்கு பெண்களைச் சென்றடையும். இவ்வாறு இந்தத் திட்டம் மகளிர் அதிகாரமளித்தல் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த உதவும்.
அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
A. ஊழியர் வருங்கால வைப்புநிதி சீர்திருத்தங்கள்
• மாதம் ரூ. 15,000 க்கு குறைவாக சம்பாதிக்கும் புதிய ஆடைத் தொழில் ஊழியர்களுக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு ஊழியர் வருங்கால வைப்புநிதி திட்டத்தின் வேலையளிப்போர் பங்கான 12 சதவீதத் தொகையையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும்.
• தற்போது 8.33 சதவீத வேலையளிப்போர் பங்கு ஏற்கனவே மத்திய அரசின் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டத்தின்படி வழங்கப்படுகிறது. ஜவுளி அமைச்சகம் கூடுதலாக 3.67 சதவீத வேலையளிப்போர் பங்கினை அடுத்த 3 ஆண்டுகளுக்குச் செலுத்தும். இதனால் அரசுக்கு ரூ. 1170 கோடி செலவு பிடிக்கும்.
• ஊழியர் வருங்கால வைப்பு நிதி மாதம் ரூ. 15,000 க்கு குறைவாக சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு விருப்பப்படி கட்டாயமின்றி வசூலிக்கப்படும்.
• இதனால் தொழிலாளர்கள் கையில் அதிகப்பணம் எஞ்சியிருக்கும். மேலும் முறையான துறைகளில் வேலைவாய்ப்பு மேம்படும்.
B. கூடுதல் பணிநேர ஊதிய உச்சவரம்பை உயர்த்துதல்
• சர்வதேச தொழிலாளர் அமைப்பு நெறிகளின்படி தொழிலாளர்களின் கூடுதல் நேரப்பணி வாரத்துக்கு 8 மணி நேரத்துக்கு மிகாது.
• இதனால் தொழிலாளர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்
C. குறிப்பிட்ட கால வேலைவாய்ப்பு திட்ட அறிமுகம்
• ஆயத்த ஆடைகள் துறை குறிப்பிட்ட பருவத்தில் மட்டும் செயல்படும் துறை என்பதால் இதில் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமான வேலை வாய்ப்பு முறை அறிமுகப்படுத்தப்படும்
• குறிப்பிட்ட காலத்துக்கான தொழிலாளர் நிரந்தர தொழிலாளருக்கு இணையாக பணி நேரம், ஊதியம், படிகள் இதர சட்டப்படியான உரிமைகள் ஆகியவற்றைப் பெறுவர்
D. திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்படுத்தப்பட்ட நிதியத் திட்டத்தின் கீழ் கூடுதல் ஊக்குவிப்புகள்
• இந்தத் திட்டம் இடு பொருட்கள் அடிப்படையிலான ஊக்குவிப்புகளுக்கு பதிலாக உற்பத்திப் பொருட்கள் அடிப்படையிலான ஊக்குவிப்புகள் என்ற புதிய முறையைக் கொண்டுவருகிறது. திருத்தப்பட்ட தொழிலநுட்ப மேம்பாட்டு நிதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தை 15 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்தி வேலைவாய்ப்பு உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது.
• இத் திட்டத்தின் தனித்தன்மையான அம்சம் என்னவெனில் எதிர்பார்த்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்ட பின்னரே மானியங்கள் விநியோகிக்கப்படும்.
E. மேம்படுத்தப்பட்ட வரி திரும்பப் பெறுதல் நடைமுறை
• முதன்முறையாக இதுவரை திரும்ப தரப்படாத மாநில வரிகள் திரும்ப தரப்படும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப் படுகிறது.
• இந்தத் திட்டத்தினால் அரசுக்கு ரூ. 5500 கோடி செலவு பிடிக்கும். ஆனால் இதனால் இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கு வெளிநாட்டுச் சந்தைகளில் போட்டியிடும் தன்மை அதிக அளவு உயரும்.
• உள்நாட்டு செலுத்தப்பட்ட வரிகள் அனைத்து தொழில்துறை விகிதத்தில் திரும்பப் பெறுவது அனுமதிக்கப்படும். முன் கூட்டிய அனுமதி திட்டத்தின் கீழ் துணி இறக்குமதி செய்யப்பட்டாலும் இது அனுமதிக்கப்படும்.
F. வருமான வரிச்சட்டம் 80 JJAA பிரிவின் வரம்பை உயர்த்துவது
• ஆயத்த ஆடைத் தொழிலின் குறிப்பிட்ட பருவ இயல்பைக் கருத்தில் கொண்டு வருமான வரிச் சட்டம் என்பது JJAA பிரிவின் கீழ் வழங்கப்படும் 240 நாள் சலுகை, ஆயத்த ஆடைத் தொழில்துறைக்கு குறைக்கப்பட்டு 150 நாட்களாக நிர்ணயிக்கப்படும்
Special package approved by the Cabinet today pertaining to textile & apparel sector will boost youth employment, manufacturing & exports.
— Narendra Modi (@narendramodi) June 22, 2016
Farmers have a very strong link with the textile sector. The package will further lead to value addition of agro products & help farmers.
— Narendra Modi (@narendramodi) June 22, 2016
The package is labour friendly & women will greatly benefit from it. It is a step for #TransformingIndia. https://t.co/rGF9BClFEw
— Narendra Modi (@narendramodi) June 22, 2016