பி.எம்.இந்தியா
விளையாட்டுத்துறையைச் சேர்ந்த ஜஸ்பால் ராணா ஜியின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது மறைவு இந்திய விளையாட்டு உலகிற்கு ஒரு பேரிழப்பு என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அவர் படைத்துள்ள சாதனைகள் மூலம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். இளம் விளையாட்டு வீரர்களுக்கு அர்ப்பணிப்புமிக்க பயிற்சியாளராகவும், சிறந்த வழிகாட்டியாகவும் அவர் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறப்பான செயல்பாடுகள், ஒழுக்கம் மற்றும் விளையாட்டுத்துறையில் அவர் ஆற்றிய சேவைகள் அவருக்கு நன்மதிப்பை பெற்று தந்ததாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த துயரமான தருணத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஒட்டுமொத்த விளையாட்டு சமூகத்தினருடன் எனது எண்ணங்கள் இணைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறியிருப்பதாவது:
“ஜஸ்பால் ராணாவின் மறைவு மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது. அவரது மறைவு, இந்திய விளையாட்டுத் துறைக்கு ஒரு பேரிழப்பு ஆகும்.
துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அவர் படைத்துள்ள அபார சாதனைகள் மூலம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இளம் விளையாட்டு வீரர்களை மிகுந்த அர்ப்பணிப்புடன் பயிற்சி அளித்து வழிநடத்தியதில் அவரது பங்களிப்பு அளப்பரியது. சிறந்த செயல்பாடு, ஒழுக்கம் மற்றும் விளையாட்டுத்துறையில் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு அவருக்கு பெரும் நன்மதிப்பை பெற்று தந்தது.
இந்த துயரமான தருணத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஒட்டுமொத்த விளையாட்டு சமூகத்தினருடன் எனது எண்ணக்ஙள் இணைந்துள்ளன. ஓம் சாந்தி.”
***
(Release ID: 2271969)
TV/SV/RJ
Deeply saddened by the passing of Shri Jaspal Rana Ji. His passing is a profound loss to the world of Indian sports.
— Narendra Modi (@narendramodi) June 12, 2026
He brought immense glory to the nation through his extraordinary achievements in shooting. Equally remarkable was his contribution as a mentor, shaping and…