பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்தய அமைச்சரவைக் கூட்டத்தில், ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்ய ஒத்துழைப்பு அளித்தமைக்காக மாநில முதல்வர்கள் மற்றும் பிறருக்கு நன்றி தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“சுதந்திர இந்தியாவில் மிகப் பெரிய வரி சீரமைப்பாக ஜி.எஸ்.டி. உள்ளது. உலக அளவில் எந்தவொரு கூட்டாட்சி அமைப்பிலும் இல்லாத வகையில் மறைமுக வரி சீரமைப்பில் பெரிய முயற்சியாக இது உள்ளது. வரிகள் மற்றும் செஸ்கள், பல முறையிலான வரி விகிதங்கள் , பலமுறை ஒத்திசைவுகள் மற்றும் வரி விதிப்பு அதிகரிப்பு போன்ற குழப்பங்கள் இதன் மூலம் அகற்றப்படும். சூழ்நிலையையே மாற்றக்கூடிய இந்தச் சீர்திருத்தம், தொழில் செய்வதை குறிப்பிடத்தக்க அளவுக்கு எளிமையாக ஆக்கி, நுகர்வோர் மற்றும் சாமானிய மக்கள் மீதான ஒட்டுமொத்த வரிச் சுமையைக் குறைக்கும்.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நிதி கூட்டாட்சியில் மிகச் சிறந்த அளவுக்கு ஒளிரும் உதாரணமாக ஜி.எஸ்.டி. உள்ளது. இந்தியாவின் கூட்டாட்சி ஜனநாயகத்தின் செயல்பாட்டுக்கு அத்தாட்சியாக இது உள்ளது. மத்திய அரசுக்கும், அனைத்து மாநில அரசுகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் நெருக்கமான ஒத்துழைப்பு காரணமாக இது சாத்தியமாகியுள்ளது. பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் 22 ஜூன் 2017-ல் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், ஜூலை 1, 2017-ல் இருந்து நாடு முழுக்க ஜி.எஸ்.டி. அமல் செய்யப்படுவதை சாத்தியமாக்க பங்களிப்பு செய்த அனைத்து மாநில அரசுகள், அனைத்து முதல்வர்கள் மற்றும் மாநில நிதியமைச்சர்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள், ஜி.எஸ்.டி. கவுன்சில், தேசிய மற்றும் மாநில அளவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து மாநில சட்டப்பேரவைகளின் உறுப்பினர்கள் மற்றும் தொழில் வர்த்தக சங்கங்கள் உள்பட சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் மத்திய அமைச்சரவை நன்றி தெரிவித்துக் கொள்கிறது.”
*****