Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறியதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் நன்றி


ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறியதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அனைத்து கட்சி தலைவர்களுக்கும் உறுபினர்களுக்கும் நன்றி தெரிவித்தார். கூட்டுறவு கூட்டாட்சிக்கு ஜி.எஸ்.டி. மசோதாவே சிறந்த உதாரணம் என்று குறிப்பிட்ட பிரதமர் இந்த முயற்சி இந்தியாவில் தயாரிப்போம், ஏற்றுமதி, மற்றும் வேலைவாய்ப்புகளை ஊக்குவித்து வருவாயை அதிகரிக்கும் என்று தனது டுவிட்டரில் தொடர் பதிவுகளாக பதிவுசெய்தார்.

“மாநிலங்கள் அவையில் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறியது வரலாற்று நிகழ்வாகும்/ இதற்காக நான் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு மறைமுக வரி முறை எனும் பாதையை வகுக்கும் முடிவை எடுத்ததற்காக நம் நாடாளுமன்ற உறுபினர்களை நாம் பாராட்ட வேண்டும்.

அனைத்து இந்தியர்களுக்கும் நன்மை அளித்து நாட்டின் சந்தை போக்கை ஊக்குவிக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மாநில அரசுகள் மற்றும் கட்சிகளுடன் இனணந்து நாங்கள் பணி புரிவோம்.

இந்த முயற்சி இந்தியாவில் தயாரிப்போம், ஏற்றுமதி, மற்றும் வேலைவாய்ப்புகளை ஊக்குவித்து வருவாயை அதிகரிக்கும்

கூட்டுறவு கூட்டாட்சிக்கு ஜி.எஸ்.டி. மசோதாவே சிறந்த உதாரணம் என்பதையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். நாம் அனைவரும் ஒன்று இணைந்து இந்தியாவை புதிய உயரத்திற்கு எடுத்து செல்வோம்”, என்று பிரதமர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.