Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜி-20 அலுவல் விருந்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அளித்த கருத்துக்கள்: உலக சவால்கள், பயங்கரவாதம் மற்றும் அகதிகள் பிரச்சினை (15.11.2015)


மேன்மை மிக்கவர்களே,

பயங்கரவாதம் முக்கியமான உலக சவால். சண்டையிட்டுக் கொள்ளும் பிராந்தியங்களிலிருந்து தொலைதூர நகரங்களின் தெருக்கள் வரை பயங்கரவாதம் உயிர்தேசம் விளைவிக்கிறது.

பயங்கரவாதத்தின் பழைய அமைப்புகள் நிலைத்திருக்கின்றன. சில நாடுகள் அதனை அரசுக் கொள்கையின் கருவியாகவே இன்னும் பயன்படுத்துகின்றன.

ஆனால் பயங்கரவாதத்தின் மாறிவரும் குணாதிசயங்களை நாம் சார்ந்திருக்கிறோம். உலகளாவிய தொடர்புகள், கிளை உறவுகள், உள்நாட்டில் வளர்ந்த பயங்கரவாதம், ஆள்சேர்ப்புக்கும் கொள்கை பரப்புக்கும் கணிணி வெளியைப் பயன்படுத்துதல் ஆகியன.

பன்முக மற்றும் திறந்த சமுதாயத்திற்கு மேலும் உயர்நிலை அச்சுறுத்தல் உள்ளது. ஆள்சேர்க்கும் பகுதிகளும் தாக்குதல் இலக்குகளும் ஒன்றாகவே உள்ளன. அதாவது சமுதாயமாக.

பாதுகாப்பிற்கான நமது உலகளாவிய கட்டமைப்பு வேறு ஒரு காலகட்டத்திற்கானவை வேறு பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள ஏற்பட்டவை. பயங்கரவாதத்தை எதிர்கொள்ள விரிவான உலகம் தழுவிய அணுகுமுறை நம்மிடம் இல்லை. மேலும், நம்மிடம் உள்ள கருவிகளை பயன்படுத்துவதில் நாம் தெரிந்தெடுத்துச் செய்கிறோம்.

மேன்மை மிகுந்தோரே! நாம் எதிர்கொள்வதைவிட மேலும் முக்கியமானது அச்சுறுத்தலுக்கு எவ்வாறு பதில் அடி கொடுக்கிறோம் என்பதே.

உலகம் முழுமையும் ஒரே குரலில் பேச வேண்டும், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருமித்து செயல்பட வேண்டும். அரசியலை இதில் கருத்தில் கொள்ளக்கூடாது.

பயங்கரவாத குழுவினருக்கிடையே வேறுபாடு காட்டக்கூடாது, அரசுகளுக்கு இடையேயும் வேறுபாடு காட்டக்கூடாது.

பயங்கரவாதத்தை ஆதரிப்போர் மற்றும் தூண்டுவோரத் தனிமைப்படுத்த வேண்டும். மனிதப் பண்புகளை பகிர்ந்து கொள்வோரின் பக்கம் நாம் துணை நிற்க வேண்டும்.

பயங்கரவாதத்தின் தனித்தன்மை வாய்ந்த சவால்களை எதிர்கொள்ள சர்வதேச சட்ட அடிப்படைகளை மறுசீரமைப்பது அவசியம்.

காலதாமதமின்றி சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான விரிவான உடன்பாட்டை உடனே நிறைவேற்ற வேண்டும்.

புலனாய்வுத் தகவல், பயங்கரவாத எதிர் நடவடிக்கை தொடர்பான சர்வதேச கூட்டுறவு மேம்பட வேண்டும்.

பயங்கரவாதிகளுக்கு ஆயுத விநியோகத்தை தடுக்கவும், பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தடுக்கவும், பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதை கட்டுப்படுத்தி அதனை குற்ற நடவடிக்கை ஆக்கவும் ஆன முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும்.

நமது கணிணி வெளியைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இன்டர்நெட் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை குறைந்தபட்சமாக்கவும் நாம் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும்.

சமயத் தலைவர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் கருத்து உருவாக்குவோர் ஆகியோரை தீவிரவாதத்திற்கு எதிரான இயக்கத்தில் ஈடுபடச் செய்ய வேண்டும். இது குறிப்பாக இளைஞர்களை நோக்கியதாக இருக்க வேண்டும். இது எந்நாடுகளில் தீவிரவாதம் அதிகம் உள்ளதோ அந்நாடுகளில் மிக அதிகமாக அவசியமாகிறது.

பயங்கரவாதம் – சமயம் இடையிலான இணைப்பை துண்டிக்க வேண்டும். மக்களை குறுகிய நோக்கத்திற்குட்படுத்தும் செயல்களுக்கு எதிராக ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும்.

மேற்கு ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் விரிவான அமைதியும் நிலைத்தன்மையும் ஏற்படச் செய்வதும் முக்கியமானதாகும்.

தற்போதைய அகதிகள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் இது அவசியமாகிறது.

மேன்மை மிக்கோரே!

இந்த நிலையில் உலகில் 6 கோடி மக்களுக்கு பாதுகாப்புத் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மிக முக்கியமான மனிதாபிமான சவாலின்பால் மேற்கு ஆசியா பிரச்சினை உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தங்கள் எல்லைகளையும் தங்கும் இடங்களையும் இத்தகையவர்களுக்கு திறந்துவிட்டவர்களுக்கு நமது நன்றிகள்.

உலகெங்கும் காணப்படும் மனித குலத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இப்பிரச்சினையை தீர்ப்பதில் ஐ.நா.விற்கு வலுவான பங்கிருக்க வேண்டும். நமக்கு நீண்ட கால அணுகுமுறை என்றும் அவசியம் வேண்டும்.

*****