பி.எம்.இந்தியா
துருக்கி நாட்டின் அன்டல்யா நகரத்தில் நடந்துவரும் ஜி-20 உச்சி மாநாட்டின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி, துருக்கி அதிபர் திரு. ரெசெப் தயீப் எர்டோகன்-ஐ இன்று சந்தித்து பேசினார்.
இந்தியாவில் உற்பத்தி செய்வோம், ஸ்மார்ட் நகரங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பொருளாதார கூட்டுறவு பற்றி விவாதிக்கப்பட்டது. நான்கு ஏற்றுமதி கட்டுப்பாடு ஆட்சிக்குழுவில் இந்தியா உறுப்பினராவதற்கு துருக்கி உதவவேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். ஐ.நா. சீர்திருத்தம், அணுசக்தி துறையில் ஒத்துழைப்பு, விண்வெளி மற்றும் வேளாண் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஸ்பெயின் பிரதமர் திரு. மரியானோ ரஜாய்-ஐ பிரதமர் மோடி சந்தித்தார். இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவது குறித்து அப்போது அவர்கள் பேசினர். மேலும், ரயில்வே துறையை நவீனமயமாக்குதல், பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி பிரிவு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் கடல் சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாட்டின் ஒத்துழைப்பு கூட்டுறவு பற்றி விவாதித்தனர்.
சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அவர்களையும் பிரதமர் சந்தித்தார்.
Turkish connect...a bilateral meeting with the host of @G20Turkey2015, President @RT_Erdogan. pic.twitter.com/smfvO6oyQd
— PMO India (@PMOIndia) November 16, 2015
Prime Minister Mariano Rajoyof Spain and PM @narendramodi hold talks on the sidelinesof @G20Turkey2015. pic.twitter.com/EUg50OwWs5
— PMO India (@PMOIndia) November 16, 2015