பி.எம்.இந்தியா
சிறப்பு விருந்தினர்களே,
பல்வேறு முக்கிய பொருளாதார வீழ்ச்சி, நிலையற்ற நிதி சார்ந்த சந்தைகள், நாணயத்தின் மதிப்பை குறைப்பதில் போட்டி ஆகியவை சர்வதேச பொருளாதார வளர்ச்சியை பலவீனமாக மாற்றி உள்ளது.
வளர்ச்சி மற்றும் முதலீடு உத்திகள் மற்றும் வேலை வாய்ப்பு திட்டங்களுக்கு துருக்கி தலைமையில் எடுக்கப்பட்டுவரும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு எனது வாழ்த்துகள். இப்போது நாம் அனைவரும் உறுதி மொழிகளை நிறைவேற்ற வேண்டும்.
வளர்ச்சியை அதிகரிக்க, நாம் பொதுத் துறை சார்ந்த முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். நாணயம் சார்ந்த திட்டங்களை மட்டும் நம்பி இருக்க முடியாது.
நாணயம் சார்ந்த திட்ட நடவடிக்கைகள் குறித்து கவனமுடன் தெரிவிக்க வேண்டும் என்று ஜி-20 தொடர்ந்து மத்திய வங்கிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். இது நிதி மற்றும் நாணய சந்தைகளை திடமாக அமைப்பதில் உதவியாக இருக்கும்.
வளர்ந்து வரும் நாடுகளின் உள்கட்டமைப்பு தேவைகளை ஆதரிக்கும் வகையில் மூலதனத்தை பன்முக வளர்ச்சி வங்கிகள் அதிகரிக்க வேண்டும். புதிய நிறுவனமான புதிய வளர்ச்சி வங்கி கூடுதல் நிதி உதவி வழங்குவதும் வரவேற்கப்படுகிறது.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சர்வேதேச அளவில் ஒருமித்த கருத்து நிலவுகிறது. பல்வேறு நாடுகளின் வளர்ச்சிக்கு தடையாக கடன் உதவிக்கு விதிமுறைகள், சிரமமான பாதுகாப்பு நடவடிக்கைகளை பன்முக நிறுவனங்கள் எடுக்ககூடாது. இது திடமான வளர்ச்சியை வீழ்த்திவிடும்.
இந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட ஐக்கிய நாடுகளின் திடமான வளர்ச்சி இலக்குகளுடன் ஜி-20யின் முயற்சிகள் ஒருங்கிணைய வேண்டும். முக்கியமாக 2030 வறுமை ஒழிப்பது என்ற இலக்குடன் இணைந்து பணிப்புரிய வேண்டும்.
ஜி-20 பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தலுக்கு முக்கியத்தும் அளிப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.
திடமான நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு முதலீடு மட்டும் போதாது. ஊழியர்களின் போக்குவரத்து மற்றும் திறனை மேம்படுத்துவதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.
சிறப்பு விருந்தினர்களே,
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதம் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டுக்குள் வளர்ச்சி வீதம் 8 சதவீத்த்திற்கு மேல் இருக்கும். பணவீக்கம், தற்போதைய கணக்கு மற்றும் பணப்பற்றாகுறையை குறைத்துள்ளோம்.
நிதி உள்ளடக்கம், குறிப்பிட்ட ஆண்டுக்குள் அனைவருக்கும் அடிப்படைத் தேவைகளை வழங்குவது ஆகியவற்றை கொண்டுள்ள எங்களின் உள்ளடக்க வளர்ச்சித் திட்டங்களான இந்தியாவில் உற்பத்தி செய்வோம், திறன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, தொழில் மையங்கள் மற்றும் அதிநவீன நகரங்கள் ஆகியவை இந்தியாவின் வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும்.
இது சர்வதேச பொருளாதாரத்தின் வலிமைக்கு ஆதாரமாக இருக்கும்.
நன்றி !
My speech on global economy & how our Government's initiatives will be a source of strength for the world economy. https://t.co/jJXmdlO86E
— Narendra Modi (@narendramodi) November 15, 2015