பி.எம்.இந்தியா
பிரான்சில் உள்ள எவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று ஐரோப்பிய கவுன்சில் தலைவர் திரு அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜனவரி 2026-ல் இந்தியாவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 16-வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டை நினைவுகூர்ந்த தலைவர்கள், அதன்பிறகு இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையயேயான இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை தலைவர்கள் வரவேற்றனர். இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையயேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் அண்மையில் நிறைவடைந்ததை ஒரு வரலாற்றுச் சாதனையாகக் குறிப்பிட்ட தலைவர்கள், அந்த ஒப்பந்தத்தில் விரைவாகக் கையெழுத்திட்டு அதனை விரைவில் அமலாக்கத்திற்கு கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். இத்தகைய நடவடிக்கை வர்த்தகம், முதலீட்டிற்கான பெரும் வாய்ப்புகளை உருவாக்குவதுடன், குறிப்பாக, தற்போதைய பதற்றமான புவிசார் அரசியல் சூழலில், விநியோக நடைமுறைகளைப் பல்வகைப்படுத்துவதற்கும் அவை உதவிடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.
உலகின் மிகப்பெரிய இரண்டு ஜனநாயக நாடுகளாகவும், வெளிப்படையான சந்தைப் பொருளாதாரங்கள், பன்முகத்தன்மை கொண்ட சமூகங்களைக் கொண்டவையாகவும் திகழும் இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம், நம்பிக்கை, பகிரப்பட்ட விழுமியங்கள், எதிர்காலத்திற்கான பொதுவான தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. ஜனவரி 2026-ல் அங்கீகரிக்கப்பட்ட ‘இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து விரிவான உத்திசார் நிகழ்ச்சி நிரல் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்தும் விவாதித்த தலைவர்கள், இது இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான உத்திசார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், பரஸ்பரம் நன்மை பயக்கும், மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்த கருத்துக்களை பரஸ்பரம் பரிமாறிக் கொண்ட தலைவர்கள், மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கு வரவேற்புத் தெரிவித்தனர். அமைதி, ஸ்திரத்தன்மை, வளம், நீடித்த வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில், உறுதியான, பன்முனை உலக ஒழுங்கை உருவாக்குவதில் தங்களுக்குள்ள ஒருங்கிணைந்த அர்ப்பணிப்புணர்வை தலைவர்கள் மீண்டும் உறுதி செய்தனர்.
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274169®=3&lang=1
(Release ID: 2274169)
****
TV/SV/SH
PM @narendramodi met @EUCouncil @eucopresident António Costa and @EU_Commission President @vonderleyen in Evian. The leaders welcomed the conclusion of the India-EU Free Trade Agreement and discussed ways to further strengthen economic ties in the years ahead. pic.twitter.com/IvpSESo8mG
— PMO India (@PMOIndia) June 17, 2026
It was wonderful meeting European Council President António Costa and European Commission President Ursula von der Leyen in Evian earlier today. At the start of this year, India was proud to host them for our Republic Day celebrations. This has been a great time for India-EU ties… pic.twitter.com/jwVVUHhYK4
— Narendra Modi (@narendramodi) June 17, 2026