Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜூலை 1-ல் ஜி.எஸ்.டி. அமலாக்கம் தொடங்குவது குறித்த முன்னேற்றத்தை பிரதமர் ஆய்வு செய்தார்

ஜூலை 1-ல் ஜி.எஸ்.டி. அமலாக்கம் தொடங்குவது குறித்த முன்னேற்றத்தை பிரதமர் ஆய்வு செய்தார்


ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து அமல் செய்யப்பட வேண்டிய ஜி.எஸ்.டி.யின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்தார்.

இரண்டரை மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில், நிதியமைச்சர் அருண் ஜேட்லியும், நிதி, பிரதமர் அலுவலக அமைச்சகங்களின் உயரதிகாரிகளும், அமைச்சரவைச் செயலாளரும் கலந்து கொண்டனர்.

தகவல் தொழில்நுட்ப (IT) ஆயத்த நிலை, மனிதவள (HR) ஆயத்த நிலை, அதிகாரிகளுக்கான பயிற்சி மற்றும் உணர்வாக்கம், தகவல் கோருபவர்களுக்கு பதில் அளிக்கும் நடைமுறை, கண்காணிப்பு போன்ற, செயலாக்கத்தின் அம்சங்களை குறிப்பாக பிரதமர் ஆய்வு செய்தார். தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு, அதிகாரிகள் பயிற்சி, வங்கிகளுடன் ஒருங்கிணைப்பு, தற்போது வரி செலுத்துவோர்களை பட்டியலில் சேர்தல் போன்ற ஜி.எஸ்.டி. நடைமுறைகள், அமலாக்கம் தொடங்கும் ஜூலை 1 -க்குள் முடித்து தயார் நிலையில் வைக்கப்படும் என பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் பாதுகாப்பு முறைமைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

தகவல் கேட்பவர்களுக்கு உடனுக்குடன் பதில் அளிப்பதற்காக – @askGst_GOI – என்ற டுவிட்டர் செயலி தொடங்கப்பட்டது. இதே தேவைக்காக அகில இந்திய அளவில் 1800-1200-232 – என்ற கட்டணம் இல்லா தொலைபேசி சேவையும் தொடங்கி வைக்கப்பட்டது.

அரசியல் கட்சிகள், தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகள் உள்ளிட்ட, இதில் தொடர்புடைய அனைத்து தரப்பினரின் உறுதியான முயற்சிகளின் நிறைவாக, ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி. அமலாக்கம் அமையும் என்று பிரதமர் கூறினார். வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், பொருளாதாரத்தில் ஒரு திருப்புமுனையாக ஜி.எஸ்.டி. அமையும் என்றார் அவர். ஒரே தேசம்; ஒரே சந்தை; ஒரே வரி என்ற நடைமுறை உருவாக்கப்படுவதன் மூலம் சாமானிய மக்கள் பெரிய அளவில் பயன் பெற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். ஜி.எஸ்.டி. தொடர்பான தகவல் தொழில் நுட்ப முறைமைகளில் தகவல் பாதுகாப்புக்கு அதிகபட்ச கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.