Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஞானத்தின் மதிப்பையும், மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலையும் எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


சமூகத்தோடு இணக்கமாக வாழும் கலையை ஞானம் கற்பிக்கிறது என்பதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். கல்வி ஞானத்தையும் வளத்தையும் தந்து, உள்ளத்தை மகிழ்ச்சியால் நிரப்புகிறது. மேலும், ஒருவரது கண்ணியத்தையும் உயர்த்துவதாக அவர் கூறியுள்ளார்.

இது குறித்த சமஸ்கிருத நீதிமொழியைத் தமது சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர், சமூகத்துடன் இணக்கமாக வாழ்வதற்கான கலையை ஞானம் கற்றுக்கொடுக்கிறது என்பதை இந்த நீதிமொழி உணர்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். இது அறிவையும், செழிப்பையும் வழங்கி, மனதை மகிழ்ச்சியால் நிரப்புகிறது. மேலும், ஒருவரின் கண்ணியத்தை மேலோங்கச் செய்கிறது. நல்லாட்சிக்கான சேவையைப் போன்றே அறிவும் விலைமதிப்பற்றது, உள்ளத்திற்கு உகந்தது, வாழ்வை உயர்த்தும் பேராற்றல்மிக்கது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308127&reg=3&lang=1

***

SS/PD/RJ