Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டர்பன் நகர மேயர் அளித்த வரவேற்பில் பிரதமர் உரை

டர்பன் நகர மேயர் அளித்த வரவேற்பில் பிரதமர் உரை

டர்பன் நகர மேயர் அளித்த வரவேற்பில் பிரதமர் உரை

டர்பன் நகர மேயர் அளித்த வரவேற்பில் பிரதமர் உரை


ஜூலு நாட்டின் மன்னர் குட்வில் ஸ்வலித்தினே கா பெகுஜூலு அவர்களே,

தேக்வினி நகராட்சியின் வணக்கத்திற்குரிய மேயர் அவர்களே

கவுரவமிக்க விருந்தினர்களே, சகோதர சகோதரிகளே,

நமஸ்தே, வணக்கம்,

சானிபோனானி- காலை வணக்கம்

இந்த அழகான நகரில் அளிக்கப்பட்ட அற்புதமான இந்த வரவேற்புக்கு எனது நன்றிகள். இன்று தென்னாப்பிரிக்காவில் எனது இரண்டாவது நாள் குவாஜூலு நேட்டல் மாநிலத்தில் இருப்பதை பெருமையாக கருதுகிறேன். இது ஜூலு வீரர்களின் மகத்தான பூமி. ஆல்பர்ட் லுத்தூலியின் மண். காந்தி, மகாத்மா காந்தியாக பரிணமித்த பூமி.

அது மட்டுமன்றி,

வரலாற்று ரீதியாக பலமான இணைப்பையும்,

கலாச்சார ரீதியில் ஆழமான உறவையும்

வளரும் பொருளாதார பிணைப்பையும்

விளையாட்டுத் துறையில் பலமான நெருக்கத்தையும்,

இந்தியா வளர்த்து வரும் நாடு.

துடிப்பான பன்முக தன்மைதான் இந்த நாட்டின் முக்கிய அடையாளம்.

டர்பன் நகரமும், குவாஜூலு நேட்டல் மாநிலமும் தவிர, வேறு நகருக்கு இந்த சிறப்பு அமைந்ததில்லை.

பேச்சு வழக்கிலும், மொழியிலும்

நம்பிக்கை, கலாச்சார பாரம்பரியம் முதலியவற்றின் பன்முக தன்மையில் நம்பிக்கை இந்த நகரின் பாரம்பரிய செழுமையாகும்.

ஒருபுறம் இதமான இந்துமாக்கடலும் மறுபுறம் ட்ரேக்கன்ஸ்பர்க் மலைத்தொடரும், கொண்டு இயற்கையின் செழுமையை கொண்டுள்ளது. இந்த நகரம் பன்முகத் தன்மையை பேணுவதன் மூலம் பலவண்ணங்கள் கொண்ட வானவில் தேசம் என்று மண்டேலா கண்ட கனவை நிலைநாட்டுகிறது. வணக்கத்துக்குரிய மேயர் அவர்களே, டர்பன் நகரம் சார்பில் எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை பெருமையாக கருதுகிறேன். என்னை மட்டுமே நீங்கள் பெருமைப்படுத்தவில்லை. எனது நாட்டின் 125கோடி மக்களையும் அங்கீகரித்துள்ளீர்கள். நான் இதைக் கூறுவதற்கு காரணம் 1860ம் ஆண்டு முதல் இந்திய தென்னாப்பிரிக்காவில் காலடி எடுத்து வைத்தது இந்த இடம்தான். 1860 நவம்பர் 16ம் தேதி ட்ரூரோ கப்பலில் 342 இந்தியர்கள் இந்த நேட்டல் மாநிலத்தில்தான் வந்திறங்கினார்கள். தேவாரம், அவரது மனைவி, அவரது இரண்டு மகள்கள்தான் முதலில் காலடி எடுத்து வைத்தவர்கள் என்று நான் அறிகிறேன். ஒன்றரை நூற்றாண்டுக்கு பின் இந்தியாவுக்கு வெளியே அதிகமான இந்தியர்கள் கொண்ட நகராக டர்பன் விளங்குகிறது. தென்னாப்பிக்காவின் இந்திய வம்சாவளியினர் அதிகம் வாழும் நகரம் டர்பன்தான். நிறவெறி உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில் காலனி ஆட்சியில் இந்தியர்கள் சந்தித்த துன்பம் அனைவரும் அறிந்த ஒன்று. எனினும், அதையும் மீறி தங்கள் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அவர்கள் காப்பாற்றினார்கள்.

இன்று அவர்கள் இந்த நாட்டின் பெருமைமிக்க வெற்றிகரமான உண்மையான குடிமக்களாக திகழ்கிறது.,

கல்வியிலும் அறிவியல் ஆராய்ச்சியிலும்

தொழில் முனைவோராகவும் வணிகர்களாகவும்

வழக்கறிஞர்களாகவும், நீதிபதிகளாகவும்

வங்கியாளர்களாகவும், மருத்துவர்களாகவும், பொறியாளராகவும்

தங்கள் நாட்டுக்கு அவர்கள் பங்களிப்பை செலுத்துகிறார்கள்.

அவர்கள் தங்களுக்காக மட்டுமே வாழவில்லை

ஏழைகளையும், நலிவுற்றோர்களையும் கைதூக்கிவிடவும் நோயாளிகளையும், முதியோரையும் பராமரிக்கவும் தாங்களும் சமுதாயத்துடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். முதியோர் இல்லங்களையும் நோயாளிகள், எயிட்ஸ் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்காக .மையங்களையும் நடத்துகிறார்கள். நண்பர்களே, நமது மக்களிடையே உள்ள வரலாற்றுரீதியான பிணைப்பு தற்கால உறவையும் வலுப்படுத்த அடித்தளமாக உள்ளது. இன்று இந்தியா பொருளாதாரத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஆப்பிரிக்காவில் முன்னணி பொருளாதார நாடாக தென்னாப்பிரிக்கா திகழ்கிறது. நம் இரு நாடுகளிடையே உள்ள வர்த்தகமும் முதலீடும் ஏற்கனவே கணிசமாக உள்ளது

நம்மிடையே உள்ள கேந்திரமான உறவை,

வணிகத்திலும், முதலீட்டிலும்

சிறு மற்றும் நடுத்தர தொழில்வளர்ச்சியிலும்

தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பத்திலும்

திறன் வளர்ப்பு, மற்றும் நிறுவன கட்டமைப்பிலும்

சமூக- பொருளாதார துறைகளில் முன்னெடுத்து செல்வதென்று நேற்று பிரிட்டோரியா நகரில் அதிபர் ஜூமோவும் நானும் முடிவு செய்தோம்.

இவைகளில் பல அம்சங்கள் குவாஜூலு நேட்டல் மாநிலத்தின் வலுவான கோட்பாடுகளாக இருப்பதால் டர்பன் நகருடன் பாரம்பரிய உறவை இது மேலும் இறுக்கமாக்கும் பாதுகாப்பிலும் ராணுவ உறவுகளிலும் இணைந்து செயல்படுவது என்றும் முடிவு செய்துள்ளோம். தென்னாப்பிரிக்காவில், அதுவும் டர்பன் நகரில் நின்றுக் கொண்டிருக்கும் நான் கிரிக்கெட் பற்றி பேசாவிட்டால் அது நோ பால் ஆகத்தான் இருக்கும். இந்த ஆட்டத்தின்மீது நம் இரு நாடுகள் கொண்டுள்ள காதல் மிகவும் ஆழமானது. நமது உறவிலும் கிரிக்கெட் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்குள்ள கிங்ஸ்மெட் மைதானம் பல மறக்க முடியாத போட்டிகளை கண்டுள்ளது. அதிலும். பெரும்பாலானவை இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே ஆனது.

நண்பர்களே,

நிறைவாக நான் சொல்ல விரும்புவது ஒன்றையொன்று சார்ந்துள்ள இந்த நவீன உலகில் ,இந்தியாவின் வளர்ச்சி ஒளிமிக்க மையமாக திகழ்கிறது.

இந்திய பொருளாதார முன்னேற்றம் எங்கள் மக்களுக்காக மட்டுமல்ல. தென்னாப்பிரிக்க மக்களுக்கும் ஆப்பிரிக்க மக்கள் அனைவருக்கும் எது பொதுவானது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னர் நான் ஃபீனிக்ஸ் சென்றிருந்தேன். மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்த வீடு அது. தென்னாபிரிக்காவில் தனது சக குடிமக்கள் சந்தித்த சிரமங்கள்தான் அவரது முக்கிய கவலையாக இருந்தது. 21ம் நூற்றாண்டில் நாங்கள் சந்தித்த சவால்கள் இப்போது மாறிவிட்ட போதிலும் வளர்ச்சி மீதான எங்கள் அக்கறை பொதுவானாகவே உள்ளது. நாம் பெறும் வளர்ச்சியின் பலன்கள் தேவையான மக்கள் பிரிவை குறிப்பாக இளைஞர்களை சென்றடைய வேண்டும்.
வாருங்கள். நாம் இருவரும் ஒத்துழைத்து அதன்மூலம் கிடைக்கும் பலன்களை ஒளிமிக்க எதிர்காலத்துக்கான வாய்ப்புகளாக மாற்றுவோம். இந்த வரவேற்பும் கவுரவமும் அளித்தமைக்காக மீண்டும் உங்களுக்கு நன்றி.

நன்றி. நன்றி.