Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்டர் பிருத்விந்திர முகர்ஜி மறைவுக்கு பிரதமர் இரங்கல்


டாக்டர் பிருத்விந்திர முகர்ஜி மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். டாக்டர் முகர்ஜி, பன்முக ஆளுமை கொண்டவர் என்றும், இசை மற்றும் கவிதைகளில் பேரார்வம் கொண்டவர் என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டதாவது:

“டாக்டர் பிருத்விந்திர முகர்ஜி ஒரு பன்முக ஆளுமை கொண்டவர், அறிவார்ந்த உலகில் ஒரு வலுவான அடையாளத்தை விட்டுச் சென்றார். இசையிலும் கவிதையிலும் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது படைப்புகள் மற்றும் பாடல்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து போற்றப்படும். இந்தியாவின் வரலாற்றைப் பாதுகாப்பதற்கும், குறிப்பாக சுதந்திரப் போராட்டத்தின் போது, இந்திய-பிரான்ஸ் உறவுகளை ஆழப்படுத்துவதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி.”

*****

RB/DL