Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்டர். பி.ஆர். அம்பேத்கரின் நினைவகத்திற்காக தேசிய நூற்பாலை கழகத்திடமுள்ள இந்து-6ஆம் எண் ஆலை நிலத்தில் 12 ஏக்கர் நிலத்தை மகாராஷ்டிர அரசிற்கு மாற்றிக் கொடுப்பதற்கான நிபந்தனைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை டாக்டர். பி.ஆர். அம்பேத்கரின் நினைவகத்தைக் கட்டுவதற்காக தேசிய நூற்பாலை கழகத்திடம் உள்ள இந்து -6ஆம் எண் ஆலைக்குரிய நிலத்தில் 12 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை மகாராஷ்டிர மாநில அரசுக்கு மாற்றித் தருவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவற்றுக்கு தனது ஒப்புதலை வழங்கியது.

பின்னணி:

லட்சக்கணக்கான இந்தியர்கள் வந்து வணங்கிச் செல்லும் பாரத ரத்னா டாக்டர். பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட இடம் தேசிய நூற்பாலை கழகத்தின் கைவசம் உள்ள இந்து 6ஆம் எண் ஆலைக்குச் சொந்தமான நிலத்திற்கு மிக அருகில் உள்ளது.

இந்து -6ஆம் எண் ஆலைக்குரிய நிலத்தில் 12 ஏக்கர் நிலத்தை டாக்டர். பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களுக்கு பொருத்தமான வகையில் நினைவாலயத்தைக் கட்டுவதற்கென, 1995ஆம் ஆண்டின் நலிந்த நெசவாலைகள் (தேசியமயமாக்கம்) திருத்தச் சட்டத்தின் 11அ பிரிவின்கீழ் கூறப்பட்ட வகையில் இழப்பீடு செலுத்துவதன் மூலம் மகாராஷ்டிர மாநில அரசிடம் ஒப்படைப்பது என்று மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தது. மேலும் இந்திய அரசு, மகாராஷ்டிர மாநில அரசு மற்றும் தேசிய நூற்பாலைக் கழகம் ஆகியவற்றுக்கு இடையேயான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றுக்கும் அது தனது அனுமதியை வழங்கியிருந்தது.