பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி டாமனில் நமோ மருத்துவமனையைத் திறந்து வைத்தார். மக்களுக்குத் தரமான சிகிச்சையை வழங்குவதற்கான தற்போதைய முயற்சிகளுக்கு இணங்க இது அமைந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். இந்த மருத்துவமனை நவீன வசதிகளைக் கொண்டுள்ளதுடன், இந்த யூனியன் பிரதேசம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இது பெரும் பங்கு வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
மக்களுக்குத் தரமான சுகாதார சிகிச்சையை வழங்கும் எங்களின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, டாமனில் நமோ மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. இது நவீன வசதிகளைக் கொண்டுள்ளதுடன், இந்த யூனியன் பிரதேசம், இதைச் சுற்றியுள்ள பகுதிகளின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பெரும் பங்காற்றும்.
(Release ID : 2269628)
***
TV/PLM/SH
In line with our efforts towards providing quality health treatment to the people, the Namo Hospital at Daman was inaugurated. It has modern facilities and will go a long way in addressing the healthcare needs of the Union Territory and surrounding areas. pic.twitter.com/5lQV5xpEIj
— Narendra Modi (@narendramodi) June 5, 2026