பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி டிரினிடாட் & டொபாகோ நாட்டின் பிரதமர் திருமதி. கமலா பெர்சாத்-பிஸ்ஸசார் வழங்கிய பாரம்பரிய இரவு விருந்தில் கலந்து கொண்டார். அந்நாட்டுப் பிரதமர் ஏற்பாடு செய்திருந்த இந்த இரவு விருந்தில் கலந்து கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, சோஹாரி இலையில் உணவு பரிமாறப்பட்டது. இது டிரினிடாட் & டொபாகோ மக்களுக்கு, குறிப்பாக இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட மக்களுக்கு மிகவும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
“டிரினிடாட் & டொபாகோ நாட்டின் பிரதமர் திருமதி கமலா பெர்சாத்-பிஸ்ஸசார் வழங்கிய இரவு விருந்தில், சோஹாரி இலையில் உணவு பரிமாறப்பட்டது. இது அந்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்டவர்களுக்கு மிகவும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இங்கு, பண்டிகைகள் மற்றும் பிற சிறப்பு நிகழ்ச்சிகளின் போது இந்த இலையில்தான் உணவு பரிமாறப்படுகிறது.”
—–
(Release ID: 2142003)
AD/TS/SV/KPG/SG
The dinner hosted by Prime Minister Kamla Persad-Bissessar had food served on a Sohari leaf, which is of great cultural significance to the people of Trinidad & Tobago, especially those with Indian roots. Here, food is often served on this leaf during festivals and other special… pic.twitter.com/KX74HL44qi
— Narendra Modi (@narendramodi) July 4, 2025