Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டெல் அவிவ் நகரத்தை வந்தடைந்ததும் இந்தியப் பிரதமர் பத்திரிக்கைகளுக்கு அளித்த அறிக்கை

டெல் அவிவ் நகரத்தை வந்தடைந்ததும் இந்தியப் பிரதமர் பத்திரிக்கைகளுக்கு அளித்த அறிக்கை

டெல் அவிவ் நகரத்தை வந்தடைந்ததும் இந்தியப் பிரதமர் பத்திரிக்கைகளுக்கு அளித்த அறிக்கை

டெல் அவிவ் நகரத்தை வந்தடைந்ததும் இந்தியப் பிரதமர் பத்திரிக்கைகளுக்கு அளித்த அறிக்கை


 

 

மாண்புமிகு பிரதமர் நேதன்யாஹூ அவர்களே,

சகோதர, சகோதரிகளே,

இஸ்ரேல் நாட்டில் வந்திறங்கியது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மாற்றத்தைக் கொண்டுவரும்படியான இந்த இஸ்ரேலிய பயணத்தை மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமர் என்ற விஷயம் எனக்கு மிகுந்த பெருமை தருவதாக உள்ளது. அவரது அழைப்பிற்காகவும், மிகுந்த கனிவுடன் என்னை வரவேற்றமைக்காகவும் எனது நண்பர் பிரதமர் நேதன்யாஹூவிற்கு நன்றி கூற விழைகிறேன். நம் இரு சமூகங்களுக்கிடையே பல நூற்றாண்டுகள் பழமையான தொடர்புகளை எனது இந்தப் பயணம் வலுப்படுத்துகிறது. இத்தகைய உறவுகளின் அடிப்படையில் 25 ஆண்டுகளுக்கு முன்பாக நிறுவப்பட்ட முழுமையான தூதரக உறவுகள் வலுவான அளவிலும் நீடித்த வகையிலும் மேலெழுந்து செல்லும் வகையில் எங்களது கூட்டணி உருவாகியுள்ளது.

நண்பர்களே,

இஸ்ரேல் நாட்டு மக்கள் ஜனநாயகரீதியான குறிக்கோள்களின் அடிப்படையில் இந்த நாட்டை கட்டியெழுப்பியிருக்கிறார்கள். கடுமையான உழைப்பு, உறுதி, கண்டுபிடிப்பு மனோபாவம் ஆகியவற்றுடன் அவர்கள் இந்த நாட்டை வளர்த்தெடுத்திருக்கின்றனர். கஷ்டங்கள் நிலவியபோதிலும் நீங்கள் முன்னேறி நடைபோட்டிருக்கிறீர்கள்; சவால்களை வாய்ப்புகளாக மாற்றியிருக்கிறீர்கள். உங்கள் சாதனைகளை இந்தியா பாராட்டுகிறது.

இன்று ஜூலை 4ஆம் தேதி.  எண்டெப் நடவடிக்கையை நீங்கள் மேற்கொண்டு சரியாக 41 ஆண்டுகள் ஆகின்றன. பிணைக்கைதிகளாக இருந்த பல இஸ்ரேலியர்களின் உயிர்களை காப்பாற்றும் முயற்சியில் இதே நாளில்தான் உங்களது பிரதமர், எனது நண்பரான பீபி தன் மூத்த சகோதரரை  பறிகொடுத்தார். உங்களது கதாநாயகர்கள் இளைய தலைமுறையினருக்கு உத்வேகம் ஊட்டுபவர்களாக இருந்துள்ளனர்.

நண்பர்களே,

இந்தியா மிகப் பழமையானதொரு நாகரீகத்தை கொண்டதாக  இருந்த போதிலும் மிகவும் இளமையான நாடாகும். இந்தியாவில் உள்ள 80 கோடி மக்கள் 35 வயதிற்கும் குறைவானவர்கள். திறமை வாய்ந்த, தனித்திறன் மிக்க இந்தியாவின் இளைஞர்கள் எங்கள் நாட்டின் உந்து சக்தியாகவும் விளங்குகின்றனர். இந்தியாவை, அதன் தொழில் துறையை, அதன் பொருளாதாரத்தை, அதன் வர்த்தக முறையை, உலகத்துடனான அதன் பரிமாற்றங்களை  மாற்றுவதற்கான எனது தொலைநோக்கை அவர்கள்தான் ஊக்குவிக்கிறார்கள்.

நண்பர்களே,

நீடித்த உயர் வளர்ச்சி, அனைத்து வகையிலும் முழுமையான வளர்ச்சி ஆகிய எங்களின் பாதையில் இந்தியா தனது முக்கியமான கூட்டாளிகளில் ஒருவராக இஸ்ரேலை நம்பியிருக்கிறது. அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், உயர் தொழில்நுட்ப கல்வி ஆகியவற்றை நம்பியிருக்க வேண்டிய தேவையானது நமது வளர்ச்சி குறித்த சவால்களை வென்றெடுக்க நம் இரு நாடுகளுக்கும் பொதுவான ஒன்றாக மாற்றியுள்ளது. நம் இரு நாட்டின் மிகவும் தனித்திறன் வாய்ந்த இளைஞர்கள், தொழில் முனைவர்கள் ஆகியோரின் உயிரோட்டமான சக்தி, கருத்துகள் ஆகியவற்றை இந்த தளங்கள் ஒன்றிணைக்கின்றன. பகிர்ந்து கொள்ளப்படவேண்டிய பொருளாதார வளத்திற்கான கூட்டணியை உருவாக்குவதோடு கூடவே, பயங்கர வாதம் போன்ற பொதுவான அச்சுறுத்தல்களுக்கு எதிராக நம் இரு நாடுகளின் சமூகங்களை பாதுகாக்கவும் நாங்கள் ஒத்துழைத்து வருகிறோம்.

இந்த தளங்கள் அனைத்திலும் முற்போக்கான கூட்டணி என்பது பிரதமர் நேதன்யாஹூவுடனான எனது கலந்துரையாடலின் வரம்பை வடிவமைக்கக் கூடும். இஸ்ரேலில் உள்ள, நம் இரு சமூகங்களையும் செழுமைப்படுத்திய, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான யூதர்கள், இந்திய வம்சாவளியினர் ஆகியோருடனும் நான் கலந்துரையாட ஆர்வமாக உள்ளேன்.

மாண்புமிகு பிரதமர் அவர்களே, நண்பர்களே,

எனது இந்தப் பயணம் நம் இருநாடுகளையும் இணைக்கும்படியான புதிய பாதையை வகுப்பதாக அமைகிறது. நம் இரு நாட்டு மக்கள், சமூகங்கள் ஆகியவற்றின் நலனுக்காக இந்தப் பயணத்தை ஒன்றாக மேற்கொள்வதில் நாங்கள் மிகுந்த ஆவலோடு உள்ளோம். நாம் ஒன்றாக நடைபோடும்போது, இஸ்ரேலுடன் வலுவான, நெகிழ்ச்சி மிக்க கூட்டணியே எனது நோக்கமாகவும், கவனத்திற்குரியதாகவும் உள்ளது. உங்களின் இந்த மகத்தான வரவேற்பிற்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி. மிக்க நன்றி.